இப்படி ஒரு சங்கடம் வரும் என்பதை அவரே நினைத்திருக்கப் போவதில்லை. அவசரக்குடுக்கை மீடியாக்களின் ஆவேச தாக்குதலில் அதிர்ந்து போயிருக்கிறார் மலேசியா வாசுதேவன்! தமிழில் மட்டுமல்ல, தென்னக மொழிகளில் எல்லாம் பாடி பாடி எல்லா மாநிலத்திலும் ரசிகர்களை திரட்டி வைத்திருப்பவர் அவர். அப்படிப்பட்ட நடிகர் கவலைக்கிடம் என்று செய்தி வந்தால் யாருக்குதான் கவலை வராது?
இன்று காலை வந்த செய்திகள் சிலவற்றில் மலேசியா வாசுதேவனுக்கு நினைவு தப்பிவிட்டது என்கிற அளவுக்கு கற்பனையை விரிய விட்டிருந்தார்கள். விசாரித்தால் அப்படியெல்லாம் இல்லைங்க. அவரு நல்லாதான் இருக்காரு. காலில் லேசா வீக்கம். நடக்க முடியாமல் வீட்ல இருக்கார். காலையில் வந்த நியூசை முதல்ல படிச்சு எங்களுக்கு சொன்னதே அவர்தான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான சிலர்.
ஆனால் கடந்த சில மாதங்களாகவே பக்கவாதத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார் அவர். அந்த நேரத்தில் தன்னை வந்து பார்க்காத இசையமைப்பாளர்கள் பற்றியெல்லாம் குறைபட்டு பேட்டியும் அளித்திருந்தார். இந்த நேரத்தில் இப்படி ஒரு செய்தி.
மலேசியாவின் ட்வின் டவர் மாதிரி கம்பீரமாக வரத்தான் போகிறார், இந்த மலேசியா(வாசுதேவன்)வும்!

No comments:
Post a Comment