‘தம்பிக்கோட்டை’ படத்தில் வில்லியாக நடித்திருக்கிறார் சங்கீதா. அவர் கூறியதாவது: 17 வயதில் நடிக்க வந்து, இதுவரை ஏகப்பட்ட காதலி வேடங்களில் நடித்து விட்டேன். காதல் காட்சிகள் போரடித்து விட்டது. எனது வயதுக்கும், தோற்றத்துக்கும் ஏற்ற வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதை விரும்புகிறேன். அதனால்தான் இந்தப் படத்தில் தாதாவாக நடிக்க சம்மதித்தேன். ‘மன்மதன் அம்பு’ படத்தில் இரண்டு குழந்தைக்கு தாயாக நடித்தேன். அதுவும் புதிதில்லை. ‘எவனோ ஒருவன்’ படத்தில் நடுத்தர வயது பெண்ணாக நடித்தேன். மனதுக்கு பிடித்த கேரக்டர், சின்ன படத்தில் கிடைத்தாலும் நடிப்பேன். ‘புத்திரன்’ படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக நடிக்கிறேன்.
இதையும் படியுங்களேன் ....
பிரபலங்களின் முகத்திரையை கிழித்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர்

No comments:
Post a Comment