இனி சினிமா வேண்டாம் என தனது வருங்காலக் கணவர் பிரபுதேவா கூறிவிட்டதால் சினிமாவிலிருந்து விலகுகிறேன், என்று அறிவித்துள்ளார் நயன்தாரா.
பிரபுதேவாவும், நயன்தாராவும் வரும் ஜூன் மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். முதல் மனைவி ரம்லத்தை பிரபுதேவா விவாகரத்து செய்கிறார். இருவரும் மனம் ஒத்து விவாகரத்து மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். ஜுன் மாதம் இதற்கான தீர்ப்பு வருகிறது.
நயன்தாரா தற்போது ராமராஜ்ஜியம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதுவே அவருக்கு கடைசி படமாம். இந்த படத்துக்கு பின் சினிமாவை விட்டு விலகப் போவதாக நயன்தாரா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹைதராபாதில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
உத்தமி பாத்திரத்தில்...
இனி சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று பிரபுதேவா வற்புறுத்தியுள்ளார். அவர் வார்த்தைக்கு கட்டுப்பட்டு இனி நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளேன். திருமணத்துக்கு பின் நடிக்க மாட்டேன். தெலுங்கில் நான் நடித்து வரும் ராமராஜ்ஜியம் படம் தான் எனது கடைசி படம். இந்த படத்தில் சீதை வேடத்தில் நடிக்கிறேன்.
ஒரு உத்தமி கேரக்டரில் நடித்து விட்டு சினிமாவுக்கு நான் முற்றுப்புள்ளி வைப்பது திருப்தியாக உள்ளது. என் வேடம் அற்புதமானது. திரையுலக வாழ்க்கையில் நான் நடிக்கும் இந்த சீதை வேடத்தை மறக்க முடியாது மிகவும் மன நிறைவை அளித்துள்ளது.
எனது அனைத்து திறமைகளையும் சீதை கேரக்டரில் வெளிப்படுத்துவேன். பத்ம பூஷன் விருது பெற்ற நாகேஸ்வரராவும் இதில் நடிப்பது இரட்டிப்பு சந்தோஷம்.
பிரபுதேவாவுக்கும், எனக்கும் தகராறு நடப்பதாக வதந்திகள் பரவியுள்ளன. எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. இது போன்ற செய்திகளை யார் பரப்புகிறார்கள் என்று புரியவில்லை. இவைகளை நான் பொருட்படுத்தவும் இல்லை. ராமராஜ்ஜியம் படம் முடிந்ததும் திருமணம் செய்து கொள்வோம். திருமணத்துக்கு பின் நல்ல மனைவியாக குடும்ப பெண்ணாகவும் இருக்க விரும்புகிறேன்.
மலையாளத்தில் நான் நடித்த பாடிகார்ட் படம் தமிழில் காவலன் என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டுள்ளனர். இதில் விஜய் ஜோடியாக நடிக்க என்னைத்தான் முதலில் அழைத்தனர். நான் மறுத்து விட்டேன்..." என்றார் நயன்.

No comments:
Post a Comment