நூற்றுக்கணக்கான ஹிட் பாடல்களை இணைந்து பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், சித்ராவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு
'சகாக்கள்' படத்திற்காக டூயட் பாடல் ஒன்றை இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்த பாடலை பாடிமுடித்த இருவரும் ரெக்கார்டிங்
தியேட்டரில் ஆனந்த கண்ணீர் விட்டபடியே, "ஓர் அற்புதமான பாடலை பாடி முடித்த திருப்தி எங்களுக்கு இருக்கிறது. இந்த ஆண்டின்
மிகச்சிறந்த டூயட் பாடலாக இந்த பாடல் வெற்றி பெறுவதுடன், காலத்தால் மறக்க முடியாத பாடலாகவும் மக்கள் மனதில் நிலைக்கும்"
என்று பாராட்டியுள்ளார்கள்.
இப்படி இரண்டு ஜாம்பவான்களை நெகிழ வைத்த, "இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கை காற்றில் போனதே.." என்ற இந்த பாடலை
எழுதி,பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் தயாரத்னம் அறிமுகமாகிறார்.
'குளிர் 100 டிகிரி' படத்தில் நடித்த சஞ்சீவ் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அத்வைதா நடிக்கிறார். இவர்களுடன் சங்கர், சிவசங்கர், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை எழுதி இப்படத்தின் மூலம் எல்.முத்துக்குமாரசாமி இயக்குநராக அறிமுகமாகிறார்.
'சகாக்கள்' என்ற தலைப்பை படித்த போதே இது எந்த மாதிரியான படம் என்பது புரிந்திருக்கும். இளமை துள்ளும் காதலும், அதனால் ஏற்படும் மோதலும், அதற்கு உதவும் ஹீரோவின் 'சகாக்கள்' என ஒரு இளமை ஊஞ்சலாடியிருக்கிறாராம் இயக்குநர் முத்துக்குமாரசாமி.
வி.வி.வி கிரியேசன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நேற்று (பிப்ரவரி 15) வெளியிடப்பட்டது.

No comments:
Post a Comment