பொதுவாக ஒரு நடிகருக்கு முதல் படமே வெற்றியென்றால் அந்த ஹீரோ மீதான திரையுலகின் பார்வையே பிரமிப்பாக இருக்கும். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து குவியும். ஹீரோக்களும் கொஞ்சம் ஓவராகவே பந்தா பண்ணுவார்கர். இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் இளம் நடிகர் விஷ்ணு. வெண்ணிலா கபடிக்குழு மூலம் வெற்றி நாயகன் ஆன விஷ்ணு, அதனைத் தொடர்ந்து துரோகி, பலே பாண்டியா ஆகிய படங்களை ஒப்புக் கொண்டு நடித்தார். முதல்படத்தில் கிடைத்த வெற்றி அடுத்தடுத்த படங்களிலும் நீடிக்கும் என்று காத்திருந்த விஷ்ணுவுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. அதேநேரம் அவர் நடிப்பதாக இருந்த குள்ளநரிக் கூட்டம் என்ற படமும் ட்ராப் ஆனது.
அடுத்தடுத்த தோல்விகளால் தனது சினிமா வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுமோ என்ற வருத்ததுடன் இருந்த விஷ்ணு, தன்னை அறிமுகப்படுத்திய டைரக்டர் சுசீந்திரனிடம் போய் உதவி கேட்டிருக்கிறார். அடுத்து விக்ரமை வைத்து படம் இயக்க தயாராகிக் கொண்டிருக்கும் சுசீந்திரன், விஷ்ணுவுக்கு உதவ முன்வந்திருக்கிறார். ஆம்! விக்ரம் படத்தை இயக்குவதற்கு முன்பு விஷ்ணுவை வைத்து ஒரு படம் இயக்க முடிவு செய்து விட்டாராம் சுசீந்திரன். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரலாம்.
இதையும் படியுங்களேன் ....
பிரபலங்களின் முகத்திரையை கிழித்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர்

No comments:
Post a Comment