நடிப்பதில் எனக்கு ஆர்வமில்லை
சீடன் படம் இசையமைப்பாளர் தினாவுக்கு 50வது படம். 50வது படம் வெளிவருகையில் இன்னொரு அவதாரமும் எடுத்திருக்கிறார். அது நடிகர். தம்பி அர்ஜுனா படத்தில் தினா ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் தரப்பில் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதால் நடித்தேன். மற்றபடி நடிப்பதில் எனக்கு ஆர்வமில்லை என்பவர், என்னை ரசிகர்கள் இசையமைப்பாளராக அடையாளம் காணுவதைதான் விரும்புகிறேன் என்கிறார்.
2 ஹீரோயின் கதையில் சுமித்ரா மகள்
மித் புரொடக்ஷன்ஸ் சார்பில் அமித் மோகன் தயாரிக்கும் படம், ‘சீடன்’. தனுஷ், கிருஷ்ணா, அனன்யா நடிக்கின்றனர். சுப்ரமணியம் சிவா இயக்குகிறார். ‘சீடன்’ படத்தை பார்த்த அனன்யா, இயக்குனர் சுப்ரமணியம் சிவாவின் காலை தொட்டு வாழ்த்துபெற்றபடி ‘இனிமேல் இப்படியொரு வேடம் கிடைக்குமான்னு தெரியாது’ என்றாராம்.
இப்படத்தில் நடித்தது குறித்து, நிருபர்களிடம் தனுஷ் கூறியதாவது: இப்படத்தை பெண்களுக்கு குறிப்பாக, என் அம்மா, மனைவி ஐஸ்வர்யா, லதாம்மா போன்றோருக்கு சமர்ப்பிக்கிறேன். அனைவரையும் கவரும் வகையில் ஒவ்வொரு காட்சியும் ஜனரஞ்சமாக இருக்கும். இவ்வாறு தனுஷ் கூறினார்.
‘நயன்தாராவோடு ஒப்பிடாதீங்க’ மேக்னா கோபம்
‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தின் ஹீரோயின் மேக்னா கூறியது: நயன்தாராபோல இருப்பதாக என்னை அவரோடு ஒப்பிட்டு பலர் கூறுகின்றனர். அவர் தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அது உற்சாகம் அளித்தாலும் என் நடிப்பு ஸ்டைலும், அவர் ஸ்டைலும் வேறுவேறுதான். எனது நடிப்பில் எனது இயக்குனர்கள் திருப்தி அடைகிறார்கள். யாராலும் யார் இடத்தையும் நிரப்பிவிட முடியாது. தற்போது ‘கள்ள சிரிப்பழகா’ படத்தில் நடிக்கிறேன். சக்தி ஹீரோ. மெடிகல் காலேஜ் மாணவி வேடம் ஏற்கிறேன். இப்படத்தை நகைச்சுவை மிகுந்த ஸ்கிரிப்டாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஜீவா. காமெடி காட்சிகளில் சூழலுக்கு ஏற்ப பேசி அசத்துகிறார் சக்தி. அவருக்கு ஈடுகொடுக்க நானும் முயற்சி எடுத்து நடிக்கிறேன். தொடர்ந்து நந்தா நந்திதா, காதல் வேதம், உயர் திரு 420 ஆகிய படங்களில் நடிக்கிறேன்.



No comments:
Post a Comment