சென்னையில் உள்ள ஏஎக்ஸ் செவன் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், 'நடிகர் ஜீவா நடித்த 'சிங்கம் புலி' படத்தை தயாரிக்க, சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் ரூ.38 லட்சம் கடன் வாங்கியது. இந்த பணத்தை திரும்ப தரக் கோரி பல முறை கோரிக்கை வைத்தும் அந்நிறுவனம் பணத்தை தரவில்லை. எனவே பணத்தை திருப்பி தராமல் படத்தை திரையிடக் கூடாது' என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி ராமசுப்பிரமணியம் விசாரித்து, 'பணத்தை தராமல் படத்தை திரையிடக்கூடாது' என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கு மீண்டும் அதே நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'பணத்தை மனுதாரர் நிறுவனத்திற்கு கொடுத்து விடுகிறோம். இதற்கான வங்கி உத்தரவாதம் கொடுத்துள்ளோம் , படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டு, 'சிங்கம் புலி' படத்தை திரையிட அனுமதி வழங்கி உத்தரவிட்டார்

No comments:
Post a Comment