இரண்டு கோடிகளுக்கும் மேல் சம்பளம். அதனால்தானோ என்னவோ இரண்டிரண்டு வரிகளாக கம்போஸ் செய்து ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கு அனுப்புவாராம் அவர். அவற்றை எடுத்துக் கொண்டிருக்கும் போதே மேலும் இரண்டு வரிகள் வந்து சேரும். இப்படி இன்ஸ்ட்டன்ட் இடியாப்பம் சுட்டாலும், ஒவ்வொன்றும் ஹிட்டோ ஹிட்¢ என்பதுதான் அவரது அட்ராக்ஷன். இப்படி வருஷத்துக்கு நாலே படம். பதினாறே பாட்டு. சூப்பர் ஹிட் இசையமைப்பாளர் என்ற பெரும்பேறு. இப்படியெல்லாம் ஹை டெக் வாழ்க்கையில் திளைத்துக் கொண்டிருப்பது நம்ம ஹாரிஸ் ஜெயராஜ்தான்.
நல்ல டிபன் வேணும்னா நாலு தெரு சுத்துனாலும் தப்பிலை என்கிற கான்சப்ட்தானே எல்லா இயக்குனர்களுக்கும். அதனால்தான் இவர் காட்டிலும் செம மழை. போகட்டும்... விஷயத்துக்கு வருவோம். இம்மாதம் வெளியாக வேண்டிய கோ திரைப்படம் என்ன காரணத்தால் தள்ளிப் போனது?
கிரிக்கெட் மேட்ச், எக்ஸாம் ஃபீவர் என்று என்னென்னவோ காரணத்தை சொல்லிக் கொண்டிருந்தாலும், நிஜ காரணம் ஹாரிஸ்தானாம். படத்திற்கு இன்னும் ரீரெக்கார்டிங் பண்ணி முடிக்கவில்லையாம் அவர். இதை வெளியில் சொல்ல முடியாமல்தான் கிரிக்கெட் மீது பழியை போடுகிறார்களாம்.

No comments:
Post a Comment