படத்தில் இடம்பெறும் கதாபாத்திரம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அந்த வேடத்தில் நடிக்கும் நடிகர்களை வாட்டுவது பாலா, போன்ற இயக்குநர்களுக்கு கைவந்தகலை. அந்த கலையை தனது கையில் எடுத்துகொண்ட புதுமுக இயக்குநர் ஒருவர், அறிமுக நடிகரை கொசுகடியில் தவிக்க வைத்திருக்கிறார்.
நியு-லைன் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் 'அரும்புமீசை குறும்புபார்வை' கிராமத்து பின்னணியில் இருக்கும் பள்ளியையும், மாணவர்கள் தங்கும் விடுதியையும் கதை களமாக கொண்ட இப்படத்தில் சந்துரு, என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஹாசினி நடிக்கிறார். இவர்களுடன் பல புதுமுகங்களும் நடிக்கின்றனர். ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் மாதக்கணக்கில் நடிப்பு பயிற்சி கொடுத்து அவர்களை தகுந்த கதாபாத்திரங்களாக மாற்றியிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் வெற்றீவீரன்.
பாரதிராஜாவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய வெற்றிவீரன், பல குறும்படங்களை இயக்கி, பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். அரசினர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையையும், அங்கு அவர்களுக்கு நிலவும் பிரச்சனைகளையும் எதார்த்தமாக படமாக்கியிருக்கும் வெற்றிவீரன், இப்படத்தின் ஹீரோ சந்ருவை, அரசினர் மாணவர்கள் விடுதி ஒன்றில், மாணவர்களுடனே தங்க வைத்து, கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அவரை தயார்படுத்தியிருக்கிறார. விடுதியில் கொசுகடி தொள்ளையால் அவதிப்பட்ட ஹுரோ,தனது அப்பாவிடம் முறையிட, "படம் நல்லா வரனும்னா இப்படி கஷ்ட்டப்பட்டாதான் தம்பி முடியும்" என்று சொல்லிவிட்டாராம் இயக்குநர்.
முதலில் கஷ்ட்டப்பட்டாலும், படப்பிடிப்பு போக போக, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துவிட்டாராம் புதுமுக நடிகர். படத்தை பார்த்த அனைவரும் படத்தைப் போலவே நடிகர்களின் நடிப்பும் எதார்த்தமாக இருக்கிறது என்று பாராட்ட, கொசுகடியால் அவதிப்பட்ட ஹீரோவின் முகத்தில் பெரும் சந்தோஷம்.

No comments:
Post a Comment