நடிகை அனுஷ்கா தமிழ் சினிமா உலகில் முன்னனி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் ரெண்டு படத்தில் அறிமுகமானார். ஆனாலும் தெலுங்கில் தான் மிகப் பிரபல நடிகையாக மாறினார்.
பின்னர் தமிழில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். விஜயுடன் வேட்டைக்காரன், சூர்யாவோடு சிங்கம் உள்ளிட்ட படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து தற்பொழுது இவரின் கைவசம் 4 படங்கள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ் தெலுங்கு மொழிகளில் மது இயக்கத்தில் ஒரு படத்திலும், கமல் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் பெயரிப்படாத ஒரு படத்திலும், நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது விரைவில் அஜித்தின் பில்லா-2 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இதனை அனுஷ்கா இன்னும் உறுதி செய்யப்படவில்லை பில்லா படத்தை விஷ்ணுவர்தன் இயக்க உள்ளார். ரஜினி பில்லாவை எடுத்த பாலாஜின் மகன் கே.பாலாஜி இப்படத்தை தயாரிக்கவுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் நிரோஷா கேமராமேன்.
அனுஷ்காவை தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களில் நடிக்க வைக்க பெருந்தொகை கொடுக்கவும் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:
Post a Comment