பாலா படத்தின் தாமதத்திற்கு யார் காரணம் என்று கேட்டால் எல்லாரும் ஒரே இடத்தை நோக்கிதான் விரல் நீட்டுவார்கள். ஆனால் அந்த விரலை மடக்கி தன் பக்கம் நீட்ட வைக்கிறார் விஷால். படம் ஏன் தாமதம்னு ஆளாளுக்கு பேசுறாங்க. உண்மையில் அதுக்கு காரணம் நான்தான். அவன் இவன் படத்தில் எனக்கு ஒன்றரை கண்! அப்படி நடிக்கறது எவ்வளவு கஷ்டம்னு நடிச்சு பார்த்தால்தான் தெரியும்.
இப்படி யாராவது வேறு லாங்குவேஜ் படங்களில் நடிச்சிருக்காங்களான்னு ரெஃபரன்சுக்காக தேடினேன். உலக மொழிகள் எதிலேயும் யாருமே அப்படி நடிக்கல. அந்த விதத்தில் எனக்கு பெருமைதான். இந்த மாதிரி நடிக்கும் போது எட்டு ஷாட்டுக்கு மேல் நடிக்க முடியாது. கண்ணு மங்கலாகிடும். அதனால்தான் இந்த படமே லேட்டாச்சு என்றார் விஷால்.
பொதுவாக இரண்டு இணையான ஹீரோக்கள் நடிக்கும் போது போட்டியும் பொறாமையும் வரும். ஆனால் பாலா படத்தில் விஷாலை அழைத்துக் கொண்டு போனதே ஆர்யாதானாம். பாவம், என்னை அழைச்சுட்டு போனவர் அவர். படத்துல எங்கிட்ட அதிகம் அடிவாங்குனதும் அவர்தான் என்ற விஷால் முகத்தில் ஒரு திருப்தி நிலவுகிறது.
பாலா என்ற பெருங்கலைஞனுடன் பணியாற்றினோமே என்ற திருப்திதான் அது!

விஷால் உலக மொழிகளில் உள்ள திரைப்படங்களை எல்லாம் ஏன் தேடி பார்க்க வேண்டும்?
ReplyDeleteதமிழிலேயே குமரிமுத்து என்று ஒரு நடிகர் எல்லா படங்களிலேயும் ஒன்றரை கண்ணோடு தான்
இதுவரை நடித்து கொண்டு இருக்கிறார்.
- ரவிபாலாஜி, சேலம்