அவன் இவன் படத்தின் படபிடிப்பு முடிந்ததின் சந்தோஷத்தில் இருக்கிறார் விஷால். அது வேற ஒன்றும் இல்லை, விக்ரம், சூர்யா, ஆர்யா மூவரும் பாலாவின் இயக்கத்தில் நடித்து முடித்தவுடன் இவர்கள் சினிமா பாதையில் ஏறுமுகம் தான்.
முதல் நான்கு படங்களில் ஹிட் கொடுத்த விஷாலுக்கு அடுத்தடுத்து வந்த படங்கள் சரியாக அமையவில்லை. அந்த நேரத்தில் தான் பாலாவின் வாய்ப்பு விஷால் வீட்டுக் கதவைத் தட்டியது. கேட்கவா வேணும்... விஷாலுக்கு குஷி தாங்கவில்லை. ஆர்யாவும் விஷாலும் இணைந்து நடித்திருந்தாலும் விஷாலுக்கு இந்தப் படத்தில் நிச்சயம் விருது கிடைக்கும் என்கிறார்கள். பல ஷாட்டுகளில் பாலாவின் பாராட்டுகளை பெற்றுள்ளார் விஷால்.
விஷால் நடிக்கும் அடுத்தப் படத்தை பிரபு தேவாதான் இயக்குகிறார். அவன் இவன் படம் ஷூட்டிங் தாமதமானதால், இதுக்கு மேல என்னால் வெயிட் பண்ண முடியாது என்று டென்ஷனில் இருந்த பிரபு தேவாவை குளிர வைத்து படத்தின் ஷூட்டிங்கை இந்த மாதம் 18 ஆம் தேதி தொடங்க இருக்கிறார்கள்.
படத்தின் நாயகி சமீரா ரெட்டி. பிரபு தேவாவின் ஆஸ்த்தான காமெடியன் வடிவேலு தான். ஆனால் இந்தப் படத்தில் விவேக் நடிக்கிறார்.விஷாலும் விவேக்கும் முதல் முறையாக இணைகிறார்கள். இந்தப் படத்தின் படபிடிப்பை புயல் வேகத்தில் நடித்து முடித்து பூபதி பாண்டியன் இயக்கும் பட்டத்து யானை படத்தில் நடிக்கிறார் விஷால்.
விஷாலுக்காக எத்தனை இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள் பாருங்க!

விஷாலும் விவேக்கும் ஏற்கனவே செல்லமே படத்தில் இணைந்து விட்டார்கள்
ReplyDelete