சிரஞ்சீவி கட்சி பெண் எம்.எல்.ஏ. கொண்டா கரேகா. இவர் தற்போது ஜெகன்மோகன் ரெட்டி அணிக்கு தாவி உள்ளார். இவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
ஆந்திராவில் காங்கிரஸ் தொண்டர்களின் செல்வாக்கை பெற்ற ஒரே தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி. அவருக்கு நீங்கள் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து கட்சியில் இருந்து வெளியேற்றி விட்டீர்கள். அவர் தனியாக பிரிந்து சென்ற பிறகு காங்கிரஸ் பலவீனம் அடைந்ததால் சிரஞ்சீவியை கட்சிக்குள் கொண்டு வந்துள்ளீர்கள். இதனால் காங்கிரசுக்கு பெரிய அளவில் பலன் ஒன்றும் இல்லை.
உங்களிடம் ஆறுதல் யாத்திரை நடத்த ஜெகன் மோகன் ரெட்டி அனுமதி கேட்ட போது எதற்காக அவரை தடுத்தீர்கள். இதில் உள்ள ரகசிய பின்னணி என்ன? காங்கிரஸ் தொண்டர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஜெகனை முதல் வராக்குமாறு கூறிய போது அதை ஏற்காமல் திறமையற்ற ரோசையாவை முதல்வர் ஆக்கினீர்கள்.
நம்பிக்கை துரோகம், பண ஆசை, இரக்கம் இல்லாத தன்மை உடையது தான் இத்தாலிய கலாசாரம். மற்றவர்கள் தங்கள் கண் எதிரில் கஷ்டப்பட்டால் கூட அதை கண்டு கொள்ளாமல் இருப்பது தான் இத்தாலியர்களின் குணம். அந்த இத்தாலிய கலாசாரத்தை ஆந்திராவில் புகுத்தி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. சோனியா காந்தியின் தவறான முடிவால் ஆந்திராவில் பல்வேறு குழப்பங்கள் நடந்து வருகிறது.
ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் 6 மாதங்களாக கலவர தீ பற்றிய போது அதை அடக்காமல் வேடிக்கை பார்த்தவர் சோனியா காந்தி. அவரால் நியமிக்கப்பட்ட பொம்மை முதல்வர் ரோசையாவால் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை. இதே போல் தற்போதைய முதல்வர் கிரண்குமார் ரெட்டியும் செயல்படாத முதல்வராக உள்ளார்.
ஆந்திராவில் நீங்கள் தொடர்ந்து இத்தாலிய கலாசாரத்தை புகுத்தினால் மாநில மக்கள் நிம்மதி இழந்து விடுவார்கள். அடுத்த தேர்தலில் ஆந்திர மக்கள் உங்களுக்கு (சோனியாவுக்கு) நல்ல பாடம் கற்பிபஇவ்வாற கரேகா அதில் கூறி உள்ளார
இதையும் படியுங்களேன் ....
பிரபலங்களின் முகத்திரையை கிழித்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர்

No comments:
Post a Comment