நடிகை திரிஷாவுக்கு பெற்றோர் திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார்கள். இதற்காக மாப்பிள்ளை தேடும் படலத்தையும் ஆரம்பித்து விட்டார்கள் என்று சமீபத்தில் செய்திகள் பரவியது. அதோடு இல்லாமல் திரிஷா, ரகசியமாக தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார் என்று செய்திகள் வெளியானது. எப்போதும் போல இந்த வதந்திகளுக்கு பதில் அளிக்காமல் அமைதிகாத்த திரிஷா, தனது திருமணம் பற்றி பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், "இதுபோன்ற வதந்திகள் பற்றி நான் கவலைப்படுவதில்லை. 2002ஆம் ஆண்டு 'லேசா லேசா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானேன். அந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே அதே ஆண்டில் நான் நடித்த 'மெளனம் பேசியதே' படம் வெளியானது. மிகப்பெரிய கதாநாயகிகள் கூட அதிகபட்சமாக ஐந்து வருடங்கள்தான் சினிமாவில் இருந்திருக்கிறார்கள். நான் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஓய்வு இல்லாமல் நடித்துகொண்டிருக்கிறேன். என் மீது பொறாமைப்படுபவர்கள்தான் அடிக்கடி இதுபோன்ற வதந்திகளை பரப்புகிறார்கள்.
பொற்றொர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நான் திருமணம் செய்துகொள்பவரை பற்றி எனக்கு தெரிய வேண்டும். அவருடைய குணம், சுபாவம், நடத்தை எல்லாம் தெரிய வேண்டும். எனக்கு பிடித்த மாதிரி என் பெற்றொர்களுக்கும் அவரை பிடிக்க வேண்டும். நான் காதலித்து ஒருவரை திருமணம் செய்துகொள்வதற்கு என் குடும்பத்தினர் நிச்சயமாக ஆரதவு தெரிவிப்பார்கள்.
அவர் சினிமாவை சேர்ந்தவராகவும் இருக்கலாம். சேராதவராகவும் இருக்கலாம். அதற்காக, நான் திட்டமிடவில்லை. இந்த விஷயத்தில் நான் சாதி, மதம் வேறுபாடு பார்க்க மாட்டேன். என்னை திருமணம் செய்துகொள்பவர் நிச்சயமாக ஒரு ஆணழகனாக இருக்க வேண்டும். அவரை எனக்கு பிடிக்க வேண்டும். அவருடன் நான் நீண்ட காலம் வாழ முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட வேண்டும். அப்படி ஒருவர் அமைந்தால், அவரை நிச்சயமாக திருமணம் செய்துகொள்வேன்."
இவ்வாறு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
இதையும் படியுங்களேன் ....
பிரபலங்களின் முகத்திரையை கிழித்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர்

No comments:
Post a Comment