சின்னவயதில் அறியாமல், தெரியாமல் செய்த ஒரு கொலையால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வளரும் ஒரு மாணவனின் சின்ன வயது லட்சியங்கள் என்ன ஆனது? என்பதை விளக்கும் படம்தானாம் "கீழத்தெரு கிச்சா".
சமீபத்தில் இசை வெளியீடு கண்ட இப்படத்தில் கீழத்தெரு கிச்சாவாக புதுமுகம் ரமேஷ்ராம் நடிக்க, அவரது ஜோடி நந்தினியா தர்ஷா நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, மநாநதி சங்கர், அஜய்ரத்தினம், பாலாசிங், முத்துக்காளை ரித்தீஸ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கும் இப்படத்தை என்.எஸ்.மாதன் எழுதி இயக்கி இருக்கிறார். மகிநடேஷ் ஒளிப்பதிவு செய்ய மணிராஜ் இசையமைக்க வி.டி.அரிபழனி படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள்!
மேலத்தெரு, தெற்குத்தெரு, வடக்குத்தெரு, குறுக்குத்தெரு உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து தெரு திரையரங்குகளிலும் விரைவில் வெளிவர இருக்கிறான் "கீழத்தெரு கிச்சா" என்பது உபரித் தகவல்!

No comments:
Post a Comment