அ.தி.மு.க., வையோ, தி.மு.க.,வையோ விமர்சிக்க வேண்டாம் என, வைகோ பேசினார்.
ஈரோட்டில் ம.தி.மு.க., மாவட்டக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ம.தி.மு.க., பொது செயலர் வைகோ,
ம.தி.மு.க., புது எழுச்சியோடு புத்துயிர் பெற்று எழும். ம.தி.மு.க., போர்க்குதிரை போன்றது. இதில் மற்றவர்கள் ஏறி சவாரி செய்ய முடியாது. கேட்ட இடம் கிடைக்கவில்லை என்றதும் சிலர், "மூன்றாவது அணி' என்றனர்; உருவ பொம்மை எரித்தனர். தனிக்கூட்டம் நடத்தினர்.
ஆனால், ம.தி.மு.க., கட்டுப்பாடான இயக்கம். உங்கள் கூட்டணியில் வலுவாகத்தானே இருந்தோம். கண்களை விற்று சித்திரம் வாங்க முடியுமா? தி.மு.க., அ.தி.மு.க.,வுக்கு மாற்று சக்தியாக உருவாவோம். நாம் எடுத்த
முடிவு, மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை தேடிக் கொடுத்துள்ளது. அ.தி.மு.க., வையோ, தி.மு.க.,வையோ விமர்சிக்க வேண்டாம். நாம் எடுத்த முடிவு தேர்தல் புறக்கணிப்பு அல்ல; தேர்தலில் போட்டியில்லை என்பதுதான்.
வரலாறு தற்போது திரும்புகிறது. நாம் முதலிடத்துக்கு வருவோம். நம் பலத்தை, சக்தியை அதிகரித்து விட்டு, பின் போட்டி களத்தில் இறங்குவோம். திராவிட கட்சியில் புதிய பரிணாமம் உதயமாகி விட்டது என்றார்.
No comments:
Post a Comment