அடுத்த முதல் அமைச்சர் கருணாநிதி தான், ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் ஆகியோர் கனவிலேயே தான் மிதக்கிறார்கள் என்றும் மன்சூரலிகான் கூறியுள்ளார்.
நடிகர் மன்சூரலிகான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அடுத்த முதல்வர் மீண்டும் கருணாநிதி தான். எதிரணியில் குறைந்தபட்ச ஒற்றுமை கூட இல்லை. பாராளுமன்ற புலி என கூறப்பட்ட வைகோவை செத்த எலியாக அம்மா வெளியே தூக்கிப் போட்டுவிட்டார். ஒரு தனியார் நிறுவனம் கூட்டணி அமைக்க விடவில்லையென்றால் தொடையை தட்டி களத்திலே இறங்கி அனைத்து தொகுதியிலும் போட்டியிட்டு மக்களை சந்திக்க வேண்டியது தானே.
அரசியல் மாற்றம் வேண்டும் என்பவர்கள் ஒன்றாக கைகோர்த்து நின்றால் தானே மக்கள் அனைவரும் இவர்கள் பின்னே வருவார்கள். 20 நாள் கூட ஒற்றுமையாக சேர்ந்து வேலை செய்ய முடியாதவர்கள் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் போது கூட தனித்தனியாக போட்டு அறிவிப்பவர்கள் பின்னால் எப்படி நாடே எழுச்சிகொண்டு வரும்?
நான் அம்மாவை சந்திக்க கடிதம் கொடுத்தேன், விஜயகாந்திடமும் பேசினேன். ஆனால் அவர்கள் ஏதோ கனவிலேயே தான் மிதக்கிறார்கள். நான் அறிவித்தபடி, சொந்த நாட்டில் அகதிகளாக வாழ்பவர்களை மீள்குடியேற்றம் செய்ய வக்கற்ற, தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும் சிங்களர்களோடு கொஞ்சி குலாவிடும் காங்கிரசை எதிர்த்து ஆலந்தூரில் போட்டியிடுகிறேன். ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பிரசாரம் செய்து வெற்றி பெறுவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment