சாய்பாபா வாழ்க்கை பற்றி தயாராகும் படத்தில் நாகார்ஜுனா நடிக்கிறார். தெலுங்கில் நாகார்ஜுனா நடித்துள்ள வெளியான ‘அன்னமாயா’, ‘ஸ்ரீராமதாசு’ ஆகிய ஆன்மிகப் படங்கள் ஹிட்டானது. இதையடுத்து மீண்டும் ஆன்மிகப் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் நாகார்ஜுனா. சாய்பாபா பற்றிய கதையில் சாய்பாபாவாக அவர் நடிக்கிறார். தெலுங்கு பட உலகின் மூத்த இயக்குனர் கே.ராகவேந்தர் ராவ் இந்தப் படத்தை இயக்குகிறார். தற்போது ‘ராஜண்ணா’ என்ற படத்தில் நடிக்கிறார் நாகார்ஜுனா. இந்த படத்தை முடித்துவிட்டு சாய்பாபா படத்தில் நடிக்கிறார்.

No comments:
Post a Comment