கருத்துக்கணிப்புகள் நாட்டு மக்களை குழப்பியடித்துக் கொண்டிருக்க, அதைவிட பெரும் குழப்பத்தோடு சுற்றி கொண்டிருக்கிறார்கள் அரசியல் சார்ந்த நடிகர்கள். யாரு வந்தாலும் ஓ.கே. ஆள விடுங்கப்பா என்று சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் இதே கோடம்பாக்கத்தில் இன்னும் பலர். தேவையில்லாமல் அரசியல் அது இதுன்னு சொந்த காசுல சூனியம் வச்சுக்கணுமா என்று ஒதுங்கிப் போகும் நடிகர்களுக்கு இந்த தேர்தல் பெரிய விஷயமில்லைதான். ஆனால், விட்றேனா பார் என்று மல்லுக்கட்டும் சினிமா பிரபலங்கள் லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர். முதல் இரண்டு இடம் யாருக்கு என்பதை அப்புறம் பார்க்கலாம்.
வலிய போய் ஜெ.வை சந்தித்த இவர் அடுத்தடுத்த சந்திப்புகளுக்கு பிறகு தானே பிரச்சாரத்திற்கு செல்வதாக முடிவெடுத்தார். விஜய் பிரச்சாரத்திற்கு செல்வாரா என்ற கேள்விக்கு நான் போனா என்ன, விஜய் போனா என்ன, இரண்டும் ஒன்றுதானே? என்று பதிலளித்து நிருபர்களையே மிரள வைத்தார்.
இந்த நிலையில், சொல்லி ஒரு வாரம் ஆச்சு. இன்னும் பிரச்சாரத்துக்கு கிளம்பலையே என்று பலரும் எஸ்.ஏ.சி விஷயத்தில் குழம்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் குழப்பத்தை தணிக்கும் விதத்தில் இன்றிலிருந்து பிரச்சாரத்தை துவங்குகிறார் எஸ்.ஏ.சி.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்து£ரில் இருந்து தனது பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறாராம்.
No comments:
Post a Comment