கடலூர்:நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டு போட்டுள்ளதால் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் ஏழு தொகுதிகளில் வெற்றி உறுதி என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க.,வினர் உள்ளனர்.ஒன்பது தொகுதிகளில் மொத்தமுள்ள 16 லட்சத்து 76 ஆயிரத்து 117 வாக்காளர்களில் 6 லட்சத்து 75 ஆயிரத்து 310 ஆண்கள், 6 லட்சத்து 78 ஆயிரத்து 231 பெண்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 13 லட்சத்து 53 ஆயிரத்து 542 பேர் ஓட்டு போட்டுள்ளனர்.மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 80.75 சதவீத ஓட்டுகள் பதிவாகியிருப்பது அரசியல் கட்சியினரை கலங்கடித்துள்ளது.
மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைஞர்களும், விலைவாசி உயர்வினால் பாதிக்கப்பட்ட நடுத்தர வர்க்க குடும்ப தலைவிகள் ஆர்வத்துடன் ஓட்டு @பாட்டிருப்பது தங்களுக்கே சாதகமாக அமையும் என அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர். மாவட்டத்தில் ஏழு தொகுதிகளில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என ஆணித்தரமாக கூறுகின்றனர்.இதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் வருமாறு:பாதாள சாக்கடை திட்டத்தினால் கடலூர் தொகுதி மக்கள் ஆளும் கட்சியினர் மீது கடும் கோபத்தில் இருந்தனர். இந்நிலையில் அய்யப்பன் எம்.எல்.ஏ., கடைசி நேரத்தில் எங்கள் கட்சிக்கு வந்ததும், மீனவ கிராமங்களின் கட்டுக் கோப்பாக விழுந்த ஓட்டும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.
குறிஞ்சிப்பாடி தொகுதியில் ஆரம்பத்தில் பின் தங்கிதான் இருந்தோம். ஆனால், அமைச்சரால் பாதிக்கப்பட்டவர்கள் கட்சி, ஜாதி வித்தியாசம் பாராமல் அவர்களாகவே அ.தி.மு.க., வேட்பாளருக்காக பிரசாரம் மேற்கொண்டதோடு தங்கள் சொந்த பணத்தையும் செலவு செய்தது எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.நெய்வேலியில் கடந்த காலங்களில் பா.ம.க., வேல்முருகன் நடந்து கொண்ட விதம் என்.எல்.சி., அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களின் கணிசமான ஓட்டு வங்கி எங்களை முன்னேற்றியுள்ளது.விருத்தாசலத்தில் தே.மு.தி.க., வேட்பாளர் தொகுதியில் நன்கு அறிமுகமானவர் என்ற தகுதியோடு அ.தி. மு.க., ஓட்டு வங்கியும் இணைந்து அவரை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.
புவனகிரி தொகுதியில் பா.ம.க., வேட்பாளர் வெளியூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதாலும், கூட்டணியில் உள்கட்சி பூசல் காரணமாக அ.தி.மு.க., வெற்றி பெறுவது உறுதி.சிதம்பரத்தில் கடந்த காலங்களில் நடந்த சம்பவங்கள் மற்றும் மீனவ கிராமங்களின் ஓட்டு வங்கி பலத்தினால் கூட்டணியை சேர்ந்த மா.கம்யூ., வேட்பாளரின் வெற்றி பிரகாசமாக உள்ளது.காட்டுமன்னார்கோவிலில் வேட்பாளர் தொகுதியை சேர்ந்தவர் என்பதோடு, எதிர்தரப்பு வேட்பாளர் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது தொகுதி பக்கமே வராததால் ஒட்டு மொத்த வாக்காளர்களின் ஆதரவினால் அ.தி.மு.க.,வின் வெற்றி உறுதியாகி விட்டது.
பண்ருட்டி, திட்டக்குடி தொகுதிகளில் எதிர்தரப்பு வேட்பாளர்கள் தொகுதி மக்களிடையே நன்கு அறிமுகமானவர்கள் என்பதோடு தாராளமாக பணம் பட்டுவாடா செய்த காரணங்களினால் எங்கள் கூட்டணி வேட்பாளர்கள் பின் தங்கியுள்ளனர். இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் ஏழு தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என ஆணித்தரமாக கூறி வருகின்றனர். கடலூர்:நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டு போட்டுள்ளதால் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் ஏழு தொகுதிகளில் வெற்றி உறுதி என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க.,வினர் உள்ளனர்.ஒன்பது தொகுதிகளில் மொத்தமுள்ள 16 லட்சத்து 76 ஆயிரத்து 117 வாக்காளர்களில் 6 லட்சத்து 75 ஆயிரத்து 310 ஆண்கள், 6 லட்சத்து 78 ஆயிரத்து 231 பெண்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 13 லட்சத்து 53 ஆயிரத்து 542 பேர் ஓட்டு போட்டுள்ளனர்.மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 80.75 சதவீத ஓட்டுகள் பதிவாகியிருப்பது அரசியல் கட்சியினரை கலங்கடித்துள்ளது.
மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைஞர்களும், விலைவாசி உயர்வினால் பாதிக்கப்பட்ட நடுத்தர வர்க்க குடும்ப தலைவிகள் ஆர்வத்துடன் ஓட்டு @பாட்டிருப்பது தங்களுக்கே சாதகமாக அமையும் என அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர். மாவட்டத்தில் ஏழு தொகுதிகளில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என ஆணித்தரமாக கூறுகின்றனர்.இதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் வருமாறு:பாதாள சாக்கடை திட்டத்தினால் கடலூர் தொகுதி மக்கள் ஆளும் கட்சியினர் மீது கடும் கோபத்தில் இருந்தனர். இந்நிலையில் அய்யப்பன் எம்.எல்.ஏ., கடைசி நேரத்தில் எங்கள் கட்சிக்கு வந்ததும், மீனவ கிராமங்களின் கட்டுக் கோப்பாக விழுந்த ஓட்டும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.
குறிஞ்சிப்பாடி தொகுதியில் ஆரம்பத்தில் பின் தங்கிதான் இருந்தோம். ஆனால், அமைச்சரால் பாதிக்கப்பட்டவர்கள் கட்சி, ஜாதி வித்தியாசம் பாராமல் அவர்களாகவே அ.தி.மு.க., வேட்பாளருக்காக பிரசாரம் மேற்கொண்டதோடு தங்கள் சொந்த பணத்தையும் செலவு செய்தது எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.நெய்வேலியில் கடந்த காலங்களில் பா.ம.க., வேல்முருகன் நடந்து கொண்ட விதம் என்.எல்.சி., அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களின் கணிசமான ஓட்டு வங்கி எங்களை முன்னேற்றியுள்ளது.விருத்தாசலத்தில் தே.மு.தி.க., வேட்பாளர் தொகுதியில் நன்கு அறிமுகமானவர் என்ற தகுதியோடு அ.தி. மு.க., ஓட்டு வங்கியும் இணைந்து அவரை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.
புவனகிரி தொகுதியில் பா.ம.க., வேட்பாளர் வெளியூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதாலும், கூட்டணியில் உள்கட்சி பூசல் காரணமாக அ.தி.மு.க., வெற்றி பெறுவது உறுதி.சிதம்பரத்தில் கடந்த காலங்களில் நடந்த சம்பவங்கள் மற்றும் மீனவ கிராமங்களின் ஓட்டு வங்கி பலத்தினால் கூட்டணியை சேர்ந்த மா.கம்யூ., வேட்பாளரின் வெற்றி பிரகாசமாக உள்ளது.காட்டுமன்னார்கோவிலில் வேட்பாளர் தொகுதியை சேர்ந்தவர் என்பதோடு, எதிர்தரப்பு வேட்பாளர் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது தொகுதி பக்கமே வராததால் ஒட்டு மொத்த வாக்காளர்களின் ஆதரவினால் அ.தி.மு.க.,வின் வெற்றி உறுதியாகி விட்டது.
பண்ருட்டி, திட்டக்குடி தொகுதிகளில் எதிர்தரப்பு வேட்பாளர்கள் தொகுதி மக்களிடையே நன்கு அறிமுகமானவர்கள் என்பதோடு தாராளமாக பணம் பட்டுவாடா செய்த காரணங்களினால் எங்கள் கூட்டணி வேட்பாளர்கள் பின் தங்கியுள்ளனர். இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் ஏழு தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என ஆணித்தரமாக கூறி வருகின்றனர்.

No comments:
Post a Comment