இதுவரை காமெடி மற்றும் குணச்சித்தர வேடங்களில் நடித்து வந்த எம்.எஸ்.பாஸ்கர், இப்போது முதன்முறையாக புலிவேஷம் எனும் படத்தின் மூலம் வில்லனாக அவதரிக்க இருக்கிறார்.
டப்பிங் ஆர்டிஸ்டாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய எம்.எஸ்.பாஸ்கர் இப்போது தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் அசத்தி வரும் எம்.எஸ்.பாஸ்கர் புதிதாக வில்லனாகவும் மாறியிருக்கிறார். டைரக்டர் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் புலி வேஷம் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் வில்லனாக நடிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் காமெடியனாகவே நடிக்க விரும்புகிறேன். ஆனால் இந்தபடத்தில் டைரக்டர் வாசு சார் என்னை வில்லனாக நடிக்கும்படி கேட்டபோது, அதை என்னால் மறுக்க முடியவில்லை. உடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். வில்லனாக நடிப்பது இதுவே முதல்முறை என்று கூறினார்.
சினிமாவில் கேமரா முன் தோன்றுவதற்கு முன்னர் டப்பிங் ஆர்டிஸ்டாக கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு பேசியிருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். தற்போது விக்ரமுடன் தெய்வத்திருமகன் படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. அதனைத்தொடர்ந்து விஜய்யுடன் வேலாயுதம், எத்தன், சிவ பூஜையில் கரடி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

No comments:
Post a Comment