மும்பை ஜுஹூ பகுதியில் உள்ளது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் பங்களாவான ‘ஜல்சா’. இங்குதான் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராயும் வசிக்கின்றனர். இந்த வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இவரது வீட்டுக்குள் தீபக் கேவட் (20) என்ற நபர் நுழைந்தார். காம்பவுண்டையொட்டி உள்ள மரத்தின் மீது ஏறி பிறகு மழை நீர் தடுப்புக்காக போடப்பட்டிருந்த தகர கூரை வழியாக பால்கனிக்கு சென்றார். அங்கிருந்து அமிதாப்பச்சனின் பெட் ரூமிற்குள் நுழைந்தார். மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் இருப்பதை பார்த்த வேலைக்கார பெண் ‘திருடன், திருடன்’ என்ற சத்தம்போட்டார். உடனே காவலர்கள் ஓடிவந்து அவரை பிடித்து ஜுஹூ போலீசில் ஒப்படைத்தனர்.
அவரிடமிருந்து ரூ.8 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மர்ம நபரிடம் கேட்டபோது, ‘நான் அமிதாப்பச்சன் ரசிகர் அவரை நேரில் பார்க்கும் ஆசையால் வீட்டுக்குள் நுழைந்தேன்’ என்றார். இதுபற்றி கூடுதல் கமிஷனர் விஸ்வாஸ் நாரே பட்டில் கூறும்போது, ‘பிடிபட்ட தீபக் கேவட் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர். மும்பைக்கு வேலை தேடி ஒன்றரை மாதத்துக்கு முன்பு வந்திருக்கிறார். ரயில்வே பிளாட்பாரத்தில் தங்கி இருந்திருக்கிறார். ஒருவரை தாக்கியதாக அவர் மீது ஏற்கனவே வழக்கு பதிவாகி உள்ளது. வேறு வழக்கில் தொடர்புடையவரா என்பது பற்றி விசாரிக்கிறோம். மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் 15 நாள் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
அமிதாப்பச்சன் வீட்டுக்குள் நுழைந்ததற்கு வேறு நோக்கம் எதுவும் உள்ளதா என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது‘ என்றார். சம்பவம் நடந்தபோது வீட்டில் அமிதாப், ஐஸ் இருந்தார்களாக என்பதை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர். இதுபற்றி அமிதாப்பச்சன் டுவிட்டர் பக்கத்தில், ‘பிடிபட்ட நபர் திருட்டு தொழிலில் கைதேர்ந்தவர்போல் தெரிகிறது. இதுபற்றி தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். எதுவும் பாதுகாப்பாக இல்லை என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்களது பதிவுகளை அழஹி.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள்
ReplyDeleteAzhahi.Com
இப்படிக்கு
Azhahi.Com
அந்த கெழவி ரூம்ல ஒன்னமாதிரி சின்ன பசங்களுக்கு என்னடா வேல......??????
ReplyDelete