தைவானின் தென்பகுதியிலுள்ள இணையதள மையம் ஒன்றில் தொடர்ந்து 40 மணிநேரம் வீடியோ கேம் ஆடிக்கொண்டிருந்த 18 வயது இளைஞர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இணையதள மையத்தினுள் நுழைந்த சுவாங் என்னும் அந்த இளைஞர், மறுநாள் மேஜை ஒன்றில் சாய்ந்து அமர்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்ட இணையதள உதவியாளர் ஒருவர் சுவாங்கை எழுப்பியுள்ளார். அப்போது எழுந்து சிறிது தூரம் நடந்த சுவாங் அங்கேயே சரிந்து விழுந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சுவாங்கை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
சுவாங் இரண்டு நாட்களாக உணவு எதுவும் சாப்பிடாமல் இருந்துள்ளார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் உடல் அசைவின்றி ஒரே நிலையில் 40 மணிநேரமாக அமர்ந்திருந்ததால், அவரது இதயக்குழாயில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தைவானில் வீடியோ கேம் ஆடியதால் இவ்வருடத்தில் மரணமடைந்த இரண்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அந்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 23 மணிநேரமாக வீடியோ கேம் ஆடிக்கொண்டிருந்த ஒருவர் கீபோர்டில் கைவத்தவாறும், கண்களால் கம்ப்யூட்டரை பார்த்தவண்ணம் மரணமடைந்திருந்தார்.
No comments:
Post a Comment