தமிழக வருவாய்த்துறை அமைச்சராக செங்கோட்டையன் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் இப்பதவியிலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். மேலும் அ.தி.மு.க.வின் தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அமைச்சர் நீக்குவதற்கான பரிந்துரை முதல்வரிடமிருந்து வந்திருப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையடுத்து வருவாய்த்துறைக்கு புதிய அமைச்சராக ஈரோடு ஊரக மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான தோப்பு என்.டி.வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை காலை 8.30 மணிக்கு பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சராக பொறுப்பேற்க உள்ள வெங்கடாசலம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment