கோவை காந்திபுரத்தில் பா.ம.க. சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி இன்று தொடங்கியது. அதனை பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தொடங்கி வைத்தார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மது இல்லாத தமிழகத்தை உருவாக்க பா.ம.க. கடந்த 22 ஆண்டாக போராடி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மது குடிப்பவர்களின் வயது 28 ஆக இருந்தது. ஆனால் இன்று 13 வயதாக மாறி விட்டது. பள்ளி மாணவர்கள்கூட மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர்.
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மதுவின் மூலம் வரும் வருமானம்தான் பெரிதாக தெரிகிறது. 2003-ம் ஆண்டு மது மூலமாக 2800 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. ஆனால் இன்று 18 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கிறது. இதன் மூலம் குடிகாரர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது தெள்ளத் தெளிவாகி உள்ளது.
ஒரு நல்ல அரசின் கடமை மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாகும். ஆனால் இன்று மதுவுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். உலகத்திலேயே மதுவை விற்கும் அரசு தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள்தான்.
தமிழகத்தில் அரசியல் சட்டம் உள்ளது. ஆனால் அதில் ஒழுங்கு இல்லை. மதுவால் ரூ. 18 ஆயிரம் கோடி வரவு கிடைக்கிறது. ஆனால் மது அருந்துபவர்களுக்கு ரூ. 2 லட்சம் கோடி செலவு ஏற்படுகிறது.
மராட்டியத்தில் ஒரு வார்டில் 25 சதவீத பெண்கள் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அங்கு வாக்கெடுப்பு நடத்தப்படும். அப்போது 50 சதவீத வாக்கு கிடைத்தால் அங்கு மதுக்கடை வராது. இந்த முறையை தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும்.
பூரண மது விலக்கை அமல்படுத்த தற்போது உள்ள அரசுக்கு 6 மாதம் கெடு விதித்துள்ளோம். அதற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் டாஸ்மாக் கடைகளுக்கு மீண்டும் பூட்டு போடும் போராட்டம் நடத்துவோம்.
மதுக்கடைக்கு எதிராக பொது நலவழக்கு தொடர உள்ளோம். திராவிட கட்சிகளை ஒழிக்கவே புறப்பட்டுள்ளோம். வரும் தேர்தலில் மது பிரச்சினையை கையிலெடுத்து பிரசாரம் செய்வோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே மது ஒழிப்புக்கான கையெழுத்தாகத்தான் இருக்கும்.
மேற்கண்டவாறு ராமதாஸ் கூறினார்.
பேட்டியின் போது மாநில தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச் செயலாளர்கள் தங்கவேல் பாண்டியன், தம்பி கோவிந்தராஜ், தாராபுரம் ரவி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜி.எஸ். குமார், மாநில மகளிர் அணி துணை தலைவி சண்முகசுந்தரி, மாவட்ட செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். கண்காட்சியில் மதுவால் ஏற்படும் நோய்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

No comments:
Post a Comment