இங்கிலாந்தில் ஒரு கூத்து நடந்துள்ளது. தன்னுடன் பணியாற்றி வரும் ஹோட்டல் பணிப்பெண்ணை, நைசாக தனது வீட்டுக்குக் கூட்டிச் சென்று அங்கு அவரை கட்டிலில் நிர்வாணமாக படுக்க வைத்து டைட்டானிக் படத்தில் வரும் கேட் வின்ஸ்லெட் போல படம் வரைந்ததாக ஒரு ஓவியரை கைது செய்துள்ளனர் போலீஸார்.
26 வயதான எட்பிளார் மெண்டிஸ் ஒரு வளரும் ஓவியர். பெரிய அளவுக்கு புகழ் பெற வேண்டும் என்ற ஆசையுடன் இருப்பவர். இவர் ஒரு நைட் கிளப்பின் ரெஸ்டாரென்ட் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருடன் பணியாற்றி வரும் பணிப்பெண் பியட்டா லிப்ஸ்கா.
ஒரு நாள் வேலை முடிந்தவுடன் தனது வீட்டுக்கு வருமாறும், தான் வரைந்து வைத்துள்ள ஓவியங்களைப் பார்த்து கருத்துச் சொல்லுமாறும் பியட்டாவிடம் கேட்டுக் கொண்டார் மெண்டிஸ். அவர் அவ்வளவு ஆர்வமாக கூப்பிடுகிறாரே என்று எண்ணிய பியட்டா, மெண்டிஸுடன் சென்றார்.
வீட்டுக்குப் போனதும் பியட்டாவை உபசரித்த மெண்டிஸ் தனது படுக்கை அறைக்குப் போனார். அங்கு சில ஓவியங்களைக் காட்டிய அவர் பின்னர் உன்னை ஒரு ஓவியமாக வரையட்டுமா என்றுகேட்டுள்ளார்.
அதைக் கேட்டு வியப்படைந்த பியட்டா சரி என்று ஒப்புக் கொண்டுள்ளார். பின்னர் படுக்கை மீது ஏறி அமர்ந்து கொள்ளுமாறு பியட்டாவிடம் கூறினாரும். அவரும் ஏறி அமர்ந்தார். அப்போது திடீரென அவர் எதிர்பாராத வகையில் பியட்டாவின் கை, கால்களைக் கட்டி விட்டார். பிறகு அவரது உடைகளை முழுவதுமாக அகற்றி நிர்வாணமாக்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்து கத்தினார் பியட்டா. அவரை சமாதானப்படுத்திய மெண்டிஸ், டைட்டானிக் படத்தில் வரும் கேட் வின்ஸ்லெட் போல உன்னையும் நிர்வாணமாக வரைய ஆசைப்படுகிறேன். இதனால் எனக்குப் பெரும் பெயர் கிடைக்கும் என்று கூறியுள்ளார். பின்னர் நிர்வாண நிலையில் இருந்த பியட்டாவை படம் வரைந்தார். ஆனால் ஓவியம் சரியாக வரவில்லையாம்.
இதையடுத்து பியட்டாவின் கட்டுக்களை அவர் அவிழ்த்து விட்டுள்ளார். அப்போது மெண்டிஸை தள்ளி விட்டு விட்டு பியட்டா தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியே ஓடினார். பின்னர் மெண்டிஸ் மீது கோர்ட்டில் வழக்குப் போட்டார்.
வழக்கு விசாரணையின்போது தன் மீதான குற்றச்சாட்டுக்களை மெண்டிஸ் மறுத்தார். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment