சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏறி, இறங்கும் நிலைக்கு ஏற்ப பெட்ரோல் விலையை உயர்த்திக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் நஷ்டத்தில் இயங்கம் எண்ணெய் நிறுவனங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைத்து வந்தது.
கச்சா எண்ணெய் விலை ஏறும்போது பெட்ரோல் விலையை உடனடியாக உயர்த்துவதில் காட்டும் ஆர்வத்தை விலை குறையும் நேரத்தில் காட்டுவதில்லை என எண்ணெய் நிறுவனங்கள் மீது பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
கடந்த மே மாதம் ஒரே நாளில் ரூ.7.50 உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து ரூ.2.13 குறைத்தது. அதன்பின்னர் கச்சா எண்ணெய் மிகவும் குறைந்த நிலையில் ரூ.3.13 அளவுக்கு குறைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு குறைந்தபட்சம் 70 காசுகள் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை சரிந்த நிலையிலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால், இந்த விலை உயர்வு என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விலை உயர்வால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 73 ரூபாயை தொட்டது. ஏற்கனவே ஒரு லிட்டர் 72 ரூபாய் 27 பைசாவாக இருந்தது. தற்போது 89 பைசா உயர்ந்து, ஒரு லிட்டர் 73 ரூபாய் 16 பைசாக விற்பனை செய்யப்படும்.
இதேபோல் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.68.48 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.73.61 ஆகவும், மும்பையில் ரூ.74.23 ஆகவும் உயர்வு கண்டுள்ளது.

No comments:
Post a Comment