Monday, July 23, 2012

பிரபல ஆலிவுட் நடிகர் ஸ்டாலோனின் மகன் தற்கொலை செய்தாரா?


ஆலிவுட் பிரபல நடிகர் சில்வெஸ்டெர் ஸ்டாலோனின் மகனும், நடிகருமான சாகே ஸ்டாலோன் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சாவுக்கு காரணம் என்ன? என்பது இன்னும் வெளிவரவில்லை. இவர் தனது காதலியை திருமணம் செய்ய இருந்ததாகவும், அதற்கு முன்பே இச்சம்பவம் நடந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
 
இதற்கிடையில் சாகே ஸ்டாலோனின் நண்பரான ஸ்டீபன் வோஸ்னிக் கூறுகையில், சாகே தற்கொலை செய்திருக்க மாட்டார். அதற்கான வாய்ப்பு கொஞ்சமும் கிடையாது. அவர் திடமான மனம் கொண்டவர் என கூறியிருக்கிறார்.
 
சாகே ஸ்டாலோன் இறந்து கிடந்த அறையில் இருந்து ஏராளமான பாட்டில்களை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். அதில் போதை தரும் மாத்திரைகள் இருந்தன. எனவே அவருக்கு போதைப்பொருள் பேரத்தில் ஈடுபட வாய்ப்பு இருந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.   


No comments:

Post a Comment