லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள மலேசிய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நூர் சூர்யானி, 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதன் மூலம் மலேசியாவில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முதல் கர்ப்பணி பெண் என்ற சாதனையை அவர் படைக்க உள்ளார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த சுமார் 16 ஆயிரம் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளில் சில வி்த்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. தற்போது அந்த பட்டியலில் மலேசியாவை சேர்ந்த கர்ப்பணி பெண் ஒருவரும் இணைந்துள்ளார்.
மலேசியாவை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நூர் சூர்யானி முகமது தயாபி. தற்போது 8 மாத கர்ப்பணியாக உள்ள இவர், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நடைபெற உள்ள 10 மீட்டர் ஏர் ரேபில் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
மலேசியாவில் இருந்து துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக தகுதி பெற்றுள்ள நூர் சூர்யானி, மற்ற வீராங்கனைகளை போலவே, பதக்கம் பெறும் ஆர்வத்துடன் களமிறங்குவதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
10 மீட்டர் ஏர் ரேபில் துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக நேரடியாக நான் தகுதி பெற்றது, என்னை யோசிக்க வைத்தது. எனக்கு குழந்தை பிறந்த பிறகு, என்னால் முன்பு போல சிறப்பாக செயல்பட முடியுமா என்ற எண்ணம் தோன்றியது.
இதனால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தீரமானித்தேன். மற்ற வீரர்கள், வீராங்கனைகள் போல, எனக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற கனவு இருந்தது. எனவே மற்றவர்களை போல எனக்கும், ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற மனஅழுத்தம் உள்ளது. தற்போது எனது போட்டிக்கான பயிற்சியில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறேன் என்றார்.
ஒலிம்பிக் போட்டியில் கர்ப்பிணி வீராங்கனையாக பங்கேற்கும் முதல் நபர் நூர் சூர்யானி ஆவார். ஆனால் ஒலிம்பிக் போட்டியி்ல் கர்ப்பிணி வீராங்கனைகள் பங்கேற்பது இது முதல் முறையல்ல.
கடந்த 1920ம் ஆண்டு பெல்ஜியம் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற சுவீடன் தடகள வீராங்கனை மங்டா ஜூலின், 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். ஆனால் போட்டியி்ல் தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல கடந்த 2006ம் ஆண்டு டெரினோ ஒலிம்பிக் போட்டியில் ஜெர்மனியின் டியானா சர்டர், 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
உலக துப்பாக்கி சுடுதல் தரவரிசையில் 47வது இடத்தில் உள்ள நூர் சூர்யானி, கடந்த 2010ம் ஆண்டு டெல்லி காமன் வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment