ரஜினி, கமல் இணைந்து நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படம். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இப்படம் 1979-ல் ரிலீசானது. கே.பாலச்சந்தர் இயக்கினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். நாயகியாக ஜெயப்பிரதா நடித்தார்.
இசைக்கு முக்கியத்துவம் அளித்து விறுவிறுப்பான காதல் காமெடி படமாக உருவாக்கி இருந்தனர். இப்படத்தில் இடம் பெற்ற ‘நம்ம ஊரு சிங்காரி’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ஆனந்த தாண்டவமோ’, ‘பாரதி கண்ணம்மா’, ‘இனிமை நிறைந்த உலகம் இருக்கு’, ‘சம்போ சிவ சம்போ’, ‘யாதும் ஊரே’, ‘எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்’ போன்ற பாடல்கள் பட்டிதோட்டி எங்கும் கலக்கின.
டிஜிட்டல், ‘3டி’ என படங்கள் நவீன தொழில்நுட்பத்துக்கு தற்போது மாறி உள்ளன. சிவாஜி நடித்த ‘கர்ணன்’ படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு 100 நாட்களை தாண்டி ஓடியது.
இதையடுத்து ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தையும் டிஜிட்டலுக்கு மாற்றி வருகின்றனர். 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இப்படம் திரைக்கு வருகிறது.
No comments:
Post a Comment