குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள பிரணாப் முகர்ஜியை மேற்கு வங்கத்திற்கு வருகை தரும்படி அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
இத்தகவலை ரயில்வே அமைச்சர் முகுல்ராய் டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார். இதேபோன்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தனது மாநிலத்துக்கு முதலில் வருகை தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த முகுல்ராய், எங்கு முதலில் போகவேண்டும் என்பதை ஜனாதிபதி பிரணாப்தான் முடிவு செய்யவேண்டும், என்றார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சியான மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ், ஜனாதிபதி தேர்தலின்போது பிரணாப் முகர்ஜிக்கு கடைசி நேரம் வரை ஆதரவு தெரிவிக்கவில்லை. தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான், வேறு வழியின்றி பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக மம்தா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment