சில மாதங்களுக்கு முன் இயக்குனர் திரு இயக்கத்தில் விஷால், த்ரிஷா ஜோடியாக நடிக்கும் படம் ‘சமரன்’ என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்டது. த்ரிஷாவும், விஷாலும் இணைபிரியா நண்பர்களாக இருந்தாலும் த்ரிஷாவுடன் நடிப்பது என்பது விஷாலுக்கு நிறைவேரா ஆசையாகவே இருந்தது(தீராத விளையாட்டு பிள்ளை படத்திலிருந்தே விஷால் த்ரிஷாவிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்).
ஒரு வழியாக த்ரிஷா நடிக்க ஒப்புக்கொள்ள வேகமாக துவங்கப்பட்ட இந்த படத்திற்கா இத்தனை பிரச்சினைகள் வரவேண்டும். சமரன்(சமரன் என்றால் போர்வீரன் என்று அர்த்தம்) என்ற டைட்டிலுடன் துவங்கி பாதி படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் சமரன் படக்குழுவிற்கு தெரிந்திருக்கிறது, ஏற்கனவே இந்த டைட்டில் இயக்குனர் சீமானால் வாங்கப்பட்டுவிட்டது என்று. சீமானிடம் ‘சமரன்’ டைட்டில் வேண்டுமென்று இயக்குனர் திரு கேட்ட போது சீமான் தர மறுத்துவிட்டார்.
சரி சமரன் தான் கிடைக்கவில்லையென்று ‘சமர்’(சமர் என்றால் போர் என்று அர்த்தம்) என்ற பெயருடன் எஞ்சியிருந்த காட்சிகளை படமாக்கத் துவங்கி கிட்டத்தட்ட ’சமர்’ முடியும் நிலையில் இருக்கும் போது அடுத்த பிரச்சினை வந்துள்ளது. படத்தின் விளம்பரத்திற்காக இயக்குனர் திரு பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுத்திருந்தார். இந்த பேட்டியை பார்த்த ’அக்வாஸ்ரே மூவீஸ்’ என்ற புரொடக்ஷன் நிறுவனத்தின் உரிமையாளர் ஷக்தி மோகன் ‘சமர்’ டைட்டில் என்னுடையது என புகார் கொடுத்துள்ளார்.
சக்தி மோகன் கொடுத்துள்ள புகாரில் “ முதலில் பா.விஜய் தான் ‘சமர்’ என்ற டைட்டிலை பதிவு செய்திருந்தார். என் படத்திற்கு அந்த டைட்டில் தேவை என்று நான் அவரிடம் கேட்டதும், பா.விஜய் பெருந்தன்மையுடன் எனக்காக விட்டுக்கொடுத்தார். ஆனால் என் படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருப்பதால் ‘சமர்’ என்ற டைட்டிலை பெறுவதற்காக நீதிமன்றம் செல்லவும் தயங்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment