விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, July 24, 2012

    செங்கல் சூளையில் வேலை பார்க்கும் ஆசிய விளையாட்டு வீராங்கனை சாந்தி!


    2006ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800மீ ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை சாந்தி சவுந்திரராஜன் கடந்த 3 மாதமாக செங்கல் சூளையில் கூலி வேலை பார்க்கிறார்.

    கடந்த 2006ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800மீ ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை சாந்தி சவுந்திரராஜன் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆனால் அவர் நாடு திரும்பிய பிறகு அவர் பெண்ணா, ஆணா என்ற பிரச்சனை எழுந்தது. அது தொடர்பாக நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவுகளும் அவருக்கு எதிராக இருந்தன.

    இதையடுத்து அவர் வாங்கிய பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பறிக்கப்பட்டதுடன் அவர் இனி எந்த போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாதவாறு இந்திய தடகள கூட்டமைப்பு அவருக்கு தடை விதித்தது. 

    பெர்லின் உலக சாம்பியன்ஷிப் 2009 போட்டி ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற தென்னாப்பிரிக்க தடகள வீராங்கனை செமன்யா இதே போன்று சர்ச்சையில் சிக்கிய பதக்கத்தை இழந்தார். அவர் எந்த போட்டியிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று சர்வதேச தடகள போட்டிகளுக்கான கூட்டமைப்பு சங்கம் அவருக்கு தடை விதித்தது.

    ஆனால் தென்னாப்பிரிக்கா செமன்யாவுக்கு ஆதரவாக போராடியதை அடுத்து அவர் மீதான தடை கடந்த ஆண்டு வாபஸ் பெறப்பட்டது. அவர் வரும் வெள்ளிக்கிழமை துவங்கவிருக்கும் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தென்னாப்பிரிக்க கொடியை ஏந்திச் செல்லவிருக்கிறார். ஆனால் சாந்திக்கோ மத்திய, மாநில அரசுகள் எந்த ஆதரவும் தெரிவிக்கவில்லை.

    இந்நிலையில் தனது பதக்கம் பறிக்கப்பட்டு வேலையில்லாமல் இருந்த சாந்தி தற்கொலைக்கு முயன்றார். அதன் பிறகு தமிழக தடகள வீரர்களுக்கு பயிற்சியாளராக மாதம் ரூ.5,000 சம்பளத்தில் வேலை பார்த்தார். அதுவும் ஒப்பந்த ஊழியராக பணியாற்றினார். அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் தேசிய அளவில் பதக்கங்கள் வென்றும் அவருக்கு ஊதிய உயர்வோ, பணி நிரந்தரமோ செய்யப்படவில்லை. இது குறித்து அவர் தமிழக அரசுக்கு விடுத்த கோரிக்கையையும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

    இதனால் அவர் பயிற்சியாளர் பணியில் இருந்து விலகினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலைபார்த்து அவரது தந்தை சவுந்திரராஜனும், தாய் மணிமேகலையும் தினமும் ரூ.500 சம்பாதிக்கின்றனர். ஆனால் அந்த வருமானத்தை வைத்து 6 பேர் இருக்கும் குடும்பத்தை ஓட்டுவது கடினம் ஆகும். அதனால் சாந்தி கடந்த 3 மாதங்களாக செங்கல் சூளையில் தினமும் ரூ.200 கூலிக்காக வேலை பார்க்கிறார்.

    இது குறித்து அவர் கூறுகையில்,

    செங்கல் சூளையில் வேலை பார்க்கிறேன். வேலைக்கு சேர்ந்த புதிதில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு சாப்பிடவும் முடியாது, எந்த பொருளையும் தொடக் கூட முடியாது. அந்த அளவுக்கு கைகள் வீங்கி வலிக்கும். தோல் உரிந்து கொப்புளங்களாக இருக்கும். நான் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரை சந்தித்து பியூன் வேலை கொடுக்குமாறு கேட்டேன். ஆனால் நான் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாததால் எனக்கு அந்த பணியைத் தர முடியாது என்று அவர் தெரிவித்தார்.

    நான் ஒரு தடகள வீராங்கனையாக செய்த சாதனைகளைக் கூறியும், எனது குடும்பத்தின் ஏழ்மை நிலையை எடுத்துக் கூறியும் எனக்கு வேலை தர மறுத்துவிட்டார். நான் அப்போதைய முதல்வர் கருணாநிதியையும், தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவையும் சந்திக்க முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை.

    நான் ஆசிய போட்டியில் பதக்கம் வென்றதற்காக கலைஞர் கொடுத்த பரிசு பணம் ரூ.15 லட்சம் எனது சகோதர, சகோதரிகளின் படிப்புக்கும், சகோதரியின் திருமணத்திற்கும் செலவாகிவிட்டது. எனது சகோதரர் இன்னும் படித்துக் கொண்டு தான் இருக்கிறார். சில சமயம் தற்கொலை செய்து கொண்டால் என்ன என்று நினைப்பேன். அல்லது யாரும் காணாத இடத்திற்கு சென்றுவிடலாமா என்று தோன்றும். ஆனால் நான் என்ன தவறு செய்தேன். என் கையில் இல்லாத விஷயத்திற்காக நான் ஏன் தண்டிக்கப்பட்டேன் என்றார்.

    மீண்டும் ஓட்டப்பந்தியத்தில் கலந்து கொள்ள சாந்தி விரும்பினாலும், தற்போது அவருக்குத் தேவை குடும்பத்தை ஓட்டும் அளவுக்கு வருமானம் வரும் ஒரு வேலை தான்.


    Posted by விழியே பேசு... at 5:44 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: விளையாட்டு செய்திகள்

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ▼  July (426)
      • கோஹ்லி 128, ரெய்னா 58 விளாசல் தொடரை வென்றது இந்தியா
      • கணவனை வெட்டி கொலை செய்து புதைத்த இடத்தை சமையல் கூட...
      • கதாநாயகனாகும் கனவு நிறைவேறியது: இசையமைப்பாளர் விஜய...
      • அசாமில் ராணுவ வாகனம் குண்டு வைத்து தகர்ப்பு: ராணுவ...
      • பிரசன்னா மனைவியாக இருக்கப் பிடிக்கவில்லை! - சினேகா
      • பாதி இந்தியாவில் கரண்ட் இல்லை.. இருளில் மூழ்கின வட...
      • ஜேம்ஸ் பாண்டுடன் பாராசூட்டில் இருந்து குதித்த 'ராண...
      • மீண்டும் நிதி அமைச்சராகிறார் ப.சிதம்பரம்- உள்துறை ...
      • ரஜினியின் 'கோச்சடையான்' காமிக்ஸ் புத்தகமாக வெளிவரு...
      • இந்திய ரயில்வேக்கு இப்படி ஒரு கேவலம் கெட்ட அமைச்சர...
      • இளம்பெணை ராகுல் காந்தி கடத்திச் சென்று கற்பழித்தது...
      • பில்லா 2 ஐத் தூக்கிவிட்டு நான் ஈ - பாக்ஸ் ஆபீஸில் ...
      • மதுரையில் மயக்க ஊசி போட்டு மாணவியை கற்பழிக்க முயன்...
      • தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த ஜெயல...
      • யம்ம்ம்மா.... 'மாற்றான்' ! வாய் பிளக்கும் கோடாம்பா...
      • இந்திய இலங்கை ஒப்பந்தம் வெற்றியா தோல்வியா?
      • அஜீத்தோடு ராணா!
      • தமிழகத்து எதிர்ப்புகளைப் பற்றி எந்த கவலையும் இல்லை...
      • பிரபுதேவா படத்தில் நடிக்கிறேன் - ஸ்ருதிஹாசன்
      • தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் "பயங்கர சப்தத்துடன் வ...
      • 20 வருடங்களுக்கு பிறகு அமலா மீண்டும் நடிக்கிறார்
      • ஆட்சியே கவிழ்ந்துவிடும்...:அன்னா ஹசாரே எச்சரிக்கை
      • செயல்திறனில் புலியைப்போன்றவர்: நரேந்திரமோடிக்கு கா...
      • லண்டன் ஒலிம்பிக் பேட்மிண்டன்: சாய்னா நேவால் வெற்றி
      • லண்டன் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்...
      • ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடம்: தமிழில் 4 படங்கள் ப...
      • சாட்டையை சுழற்றிய ஜெயலலிதா- கவுன்சிலர்களின் பதவி ப...
      • 50 வது படத்தை இயக்கிகுறார் மணிவண்ணன் - தலைப்பு: அம...
      • நெல்லையை சேர்ந்த 5 பேர் பலியா?: தகவல் கிடைக்காததால...
      • தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் இந்து அமைப்பி...
      • அடுத்த மாதம் 2 பவுர்ணமிகள்: 2-வது பவுர்ணமி நீல நிற...
      • கொலைகார போலீசைக் கண்டித்து நல்லகண்ணு, வைகோ உண்ணாவி...
      • நித்யானந்தாவை மிரட்டிய வழக்கு: சைதாப்பேட்டை கோர்ட்...
      • தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் காயமடைந்தோர் ...
      • ரெயிலில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினோம்: தீ...
      • மோடியை புகழ்ந்து தள்ளிய ராம்தேவ்: கடுப்பில் அன்னா ...
      • என்னை எதிர்க்கட்சி தலைவராக மதிக்கவில்லை: விஜயகாந்த...
      • கோவில் நகைகளை திருடிய அதிமுக நிர்வாகி கைது
      • சிரியாவில் ராணுவத்துடன் போரிட ஆயுதம் கொடுங்கள்: உல...
      • ஒலிம்பிக் போட்டியின் இடைவெளி நேரங்களில் நடனமாடி கல...
      • அரக்கோணம் அருகே கர்ப்பிணி பெண்ணை கடத்தி 2-வது திரு...
      • லட்சக்கணக்கான பயணிகளை பீதிக்குள்ளாக்கும் இந்தியாவி...
      • வறுமை காரணமாக ஆந்திராவில் 2 வயது குழந்தை ரூ.22 ஆயி...
      • ரெயில் தீ விபத்து: உடல்கள் கருகியதால் அடையாளம் தெர...
      • பாக். எல்லையில் இந்தியாவுக்குள் ஊடுருவ ஆக்சிஜன் கு...
      • நாளை 4-வது ஆட்டம்: இந்திய அணி தொடரை கைப்பற்றுமா?
      • ரயில் விபத்து: நெல்லூர் விரையும் ஆந்திர முதல்வர்- ...
      • டெல்லியில் இருந்து சென்னை வந்த ரெயிலில் தீ விபத்து...
      • ஊழல் இல்லாத மாநிலம் குஜராத்: நரேந்திரமோடிக்கு பாபா...
      • திருமுல்லைவாயலில் இன்று பள்ளி வாகனத்தில் சிக்கி 1 ...
      • 34 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை பிரிந்த பெண் பே...
      • பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடை...
      • லஞ்சக்கரைப் படாத வெள்ளை மனிதர் நரேந்திர மோடி: பாபா...
      • துடுப்பு படகு: ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் சவ...
      • அன்னா ஹசாரே உண்ணாவிரதம்: டெல்லியில் ஆதரவாளர்கள் கு...
      • பிரபாகரனின் தாயை சிகிச்சைக்கு கூட அனுமதிக்காத கருண...
      • இலங்கையுடன் நட்பாக இருக்கவே மத்திய அரசு விரும்புகி...
      • இலங்கை சிறையில் சங்கிலியால் கட்டி துன்புறுத்தினர் ...
      • சகுனி ப்ளாப் படமா... யார் சொன்னது? - கேட்கிறார் கா...
      • பழைய நடிகை ஸ்ரீதேவியுடன் இணையும் அஜீத்!
      • ஒலிம்பிக் தொடக்க விழா துளிகள்
      • சோனியா அகர்வாலிடம் செம அடி வாங்கிய நடிகர் சூர்யாவி...
      • ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய அணியுடன் வந்த மர்ம ப...
      • தனுஷ் பிறந்தநாள் தண்ணி பார்ட்டி! ஐஸ்வர்யா மிஸ்ஸிங் !!
      • மாற்றான் இசை வெளியீடு
      • ஜனாதிபதி நிகழ்ச்சிகளை யூ-டியூப் வழியாக பார்க்கலாம்
      • படுசொதப்பலாகிவிட்ட அன்னா ஹசாரே குழு உண்ணாவிரதம்.. ...
      • அடுத்தடுத்து 3 குழந்தைகள் பலி: பள்ளி குழந்தைகளை கா...
      • தேர்தலில் நான் போட்டியிடவும் இல்லை- தனி கட்சி தொடங...
      • துப்பாக்கி சூடு: பெண்கள் 10மீ. ஏர் ரைபிள் பிரிவில்...
      • 45 வயது வரை விளையாடுவேன்: தெண்டுல்கர் சூசக தகவல்
      • இந்திய வீரர்கள் களம் இறங்கும் போட்டிகளும்,போட்டி த...
      • ஒலிம்பிக் போட்டியில் தமிழக இளைஞர்களின் கலைநிகழ்ச்சி
      • ஸ்ரீகாந்த் படத்துக்காக சிம்பு பாடும் குத்துப்பாட்டு
      • ‘நான் ஈ’ இந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன்
      • என்.டி.திவாரிதான் ரோகித் சேகரின் தந்தை: மரபணு சோதன...
      • 18 ஒலிம்பிக் பதக்கங்களை அள்ளி சென்ற லரிசாவின் சாதன...
      • திவாரியின் மனு தள்ளுபடி: மரபணு சோதனை அறிக்கையை கோர...
      • கூட்டம் வராததால் டென்ஷன்... பத்திரிக்கையாளர்ளை தாக...
      • ஏர்செல் விவகாரம்: தயாநிதி மாறனிடம் மீண்டும் விசாரணை
      • உலகிலேயே மிகப் பெரிய திறந்தவெளி கழிப்பறை.. இந்திய ...
      • ஒலிம்பிக் பதக்கங்களின் சிறப்பம்சம்
      • ரஞ்சிதா வழியில் நித்தியானந்தாவின் சிஷ்யையான நடிகை ...
      • வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியத்துடன...
      • ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இந்தியருக்கு 5 கிலோ ...
      • மான் வேட்டையாடிய வழக்கு: சல்மான்கானுக்கு ஜெயில்?
      • ஜியோன் பள்ளியில் ஏற்கனவே 2 குழந்தைள் இறந்தனரா?
      • மதுரையில் பள்ளிக்கூட பெஞ்சை விற்று மது குடித்த மாண...
      • ரொம்ப நியாயமான மனுஷங்க இந்த ஆளு! - ரஜினி பற்றி கமல்
      • லண்டன் ஒலிம்பிக்: 6 இந்திய வீரர்-வீராங்கனைகள் பங்க...
      • பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்கிற...
      • நோ நோ சொன்ன சோனா!
      • ஆடி வந்தால் ஈ இருக்கும் ‘மேயர் பேசுகிற பேச்சா இது...’
      • பிரணாப் முகர்ஜியின் முதல் நாள் பணிகள்
      • சீன அகராதியில் காம்ரேட் வார்த்தை நீக்கம்
      • விரைவில் ஃபேஸ் புக்கில் பிரணாப்
      • லண்டன் ஒலிம்பிக் போட்டி காண செல்லும் இந்திய பிரபலங...
      • மாயாவதி சிலை சேதம் எதிரொலி: உ.பி. முழுவதும் போலீஸ்...
      • தனுஷ் + அமலா + சற்குணம் !
      • விரைவில் வெளியாகிறது பாலாவின் 'பரதேசி'
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.