நாளை துவங்க இருக்கும் இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் ஐ.சி.சி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை முதலிடத்தில் இருந்த இந்திய அணி தற்போது 117 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் உள்ளது.
பல வருடங்களாக தரவரிசையில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணிதான் தற்போது 119 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடம் வகிக்கிறது. எனினும் சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-0 என்ற கணக்கில் இழந்ததால், ஆஸ்திரேலிய அணியின் முதலிடத்துக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இலங்கை அணிக்கெதிரான தொடரை முழுமையாகக் கைப்பற்றும் பட்சத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்கலாம்.
No comments:
Post a Comment