மதுரையை சேர்ந்த வக்கீல் ஜெயக்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார் அதில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற தொடக்க விழாவில் நடிகைகள் கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, நடிகர்கள் அமிதாப்பச்சன், சல்மான்கான் உள்பட பலர் ஆபாச நடனம் ஆடினர்.
முகம் சுளிக்கும் வகையில் நடந்த இந்த நடனத்தை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்தனர். இதுகுறித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி. மற்றும் தென் மண்டல ஐ.ஜி. உள்பட பல போலீஸ் அதிகாரிகளுக்கு மனு அனுப்பி இருந்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி செல்வம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் ஆஜரானார். அரசு சார்பில் வக்கீல் செல்லபாண்டியன் ஆஜரானார்.
வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் வாதாடுகையில், ஐ.பி.எல். தொடக்க விழாவில் ஆபாச நடனம் ஆடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். வக்கீல் செல்லபாண்டியன் வாதாடுகையில் கோர்ட்டு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அரசு செயல்பட தயாராக உள்ளதாக கூறினார்.
அதன்பின்பு நீதிபதி செல்வம் உரிய பதில் அளிக்கும்படி போலீஸ் டி.ஜி.பி., ஐ.ஜி. (பொது) போலீஸ் ஐ.ஜி. தென் மண்டலம், ஐ.பி.எல். தலைவர் ராஜேஷ் சுக்லா, நடிகர்கள் அமிதாப்பச்சன், சல்மான்கான், நடிகைகள் கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா உள்பட 12 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை வருகிற 31-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

No comments:
Post a Comment