கொல்கத்தாவில் கடந்த 1993-ம் வருடம் 13 காங்கிரஸ் ஆதரவாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது நினைவாக இன்று மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமை தாங்கினார்.
அந்த பேரணியின் போது மம்தா பானர்ஜி பேசியதாவது:-
நான் ஒரு கடுமையான நிர்வாகிதான். எங்கள் கட்சி மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் வலுவான நிலையிலேயே இருக்கிறது. எங்களுக்கு முழு மரியாதை கிடைக்கும்வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்திருப்போம்.
மேலும், டெல்லி தலைமைக்கு நான் ஒன்று கூறிக்கொள்கிறேன். மேற்கு வங்கத்தை நிராகரிக்க வேண்டாம். அவ்வாறு நடக்குமாயின் எங்களது உரிமையை தட்டிப் பறிக்க எங்களால் முடியும். மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தனித்து செயல்படவும் தயார் என மத்திய அரசை எச்சரித்துள்ளார்.
No comments:
Post a Comment