மலையாள திரை உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாக வலம் வருபவர் காவ்யா மாதவன். இவர் தற்போது சினிமாவுக்கு பாட்டு எழுதியும், பாடியும், அவரே இசையும் அமைத்து உள்ள பாடல்கள் விரைவில் வெளிவர உள்ளது.
பாட்டெழுதி, இசை அமைத்து, பாடிய அனுபவம் குறித்து காவ்யா மாதவனிடம் கேட்டபோது, மனம் திறந்து பதில் அளித்தார். அதன் தொகுப்பு இதோ.
நான் பாட்டெழுதுவது அதிசயம் அல்ல. எனது வரிகளை கவிதை என நான் நினைப்பது இல்லை. நான் வரிகளை பாட்டுகளாகதான் நினைக்கிறேன். எனது பாட்டுகள் ரசிகர்களை கவரும் எனவும் நான் நினைக்கவில்லை.
பாட்டெழுதி எனக்கு பெரிய அனுபவம் இல்லை. ஆனால் எனக்கு பாட்டெழுத வேண்டும் என்று ஆசை இருந்தது. அதில் பிறந்தது தான் எனது பாட்டுகள். சினிமாவிற்கு கதை, வசனம் எழுத ஆசை இருந்தும் அந்த துறைக்கு நான் செல்ல விரும்பவில்லை.
நான் 9-ம் வகுப்பு படிக்கும்போது முதல் பாட்டு எழுதினேன். நான் இதுவரை 8 பாட்டுகள் எழுதி உள்ளேன். எனது பெயரில் பாடல்கள் வலம் வர வேண்டும் என ஆசைப்பட்டேன். அது இப்போது நிறைவேற உள்ளது.
எனக்கு அறிமுகமான ஒரு நபரின் மரணம்தான் முதல் பாட்டெழுத காரணம். 8 பாட்டில் ஒரு பாட்டை நான் சொந்தமாக பாடி உள்ளேன். 'உள்ளே அடங்கி விடுமோ எனக்காக பூத்த பூவே' பாடலை ஜோன்ஸன் பாடி உள்ளார். 'என்னை தெரிந்ததா கிருஷ்ணா' என்ற பாடலை சித்ரா அக்கா பாடி உள்ளார்.
நான் 8-ம் வகுப்பு வரை சாஸ்திர சங்கீதம் படித்து உள்ளேன். நான் படித்தபோது பாட்டு எழுத காரணம் பள்ளிகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவே. பள்ளி நாட்களில் தினமும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பழக்கம்.
எனது இளம் வயதில் கண்ணாடி முன்னால் நின்று பாடுவது எனக்கு பிடிக்கும். எனது பாட்டுகள் கொஞ்சல் ரகத்தை சேர்ந்தது ஆகும். எனது பாட்டுகளை சுஜாதா அக்கா பாடி உள்ளார். அவர் எனது பாட்டுகளை சந்தோஷத்துடன் பாடிக் கொடுத்தார்.
மலையாள திரை உலகில் பாட்டுகள் பாடி நடித்து புகழ் பெற்றவள் நான். 'வெண்ணிலா சந்தன கிண்ணம்' பாட்டு மிக பிரபலம் அடையும். எனக்கு பிடித்த பாடல்கள் உள்ள சினிமா மீசை மாதவன் ஆகும். நல்ல பாட்டுகளில் நடித்தது நான் செய்த தவம் ஆகும்.
தற்போது எனது 8 பாட்டுகள் வெளிவருகிறது. அது மிகவும் பிரபலம் அடையும் என நம்புகிறேன். எனது பாட்டின் சி.டி. வெளியீட்டு விழா எர்ணாகுளத்தில் வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. சி.டி.யை நடிகர் மம்முட்டி வெளியிடுகிறார்.
No comments:
Post a Comment