பாகிஸ்தானுக்கு ராணுவ நிதியுதவியாக வழங்கிவரும் 1.3 மில்லியன் டாலரை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமீபகாலமாக வலுத்து வந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியில் 650 மில்லியன் டாலரை ரத்து செய்ய குரல் ஓட்டெடுப்பு மூலம் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு அறிக்கை செனட்டின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து பேசிய அமெரிக்க வெளியுறவு கமிட்டியின் உறுப்பினர் டெட் போவ், 'அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்கி பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இத்தகைய நடத்தையால் பாகிஸ்தான் அமெரிக்காவின் நம்பிக்கையை இழந்துவிட்டது. பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளித்து வந்தால், எதிரிக்குப் பணம் கொடுத்து அமெரிக்கர்களைக் கொல்வதற்கு ஈடாகும்' என்று கூறினார்.
எனவே அமெரிக்கா இனிமேல் பாகிஸ்தானிற்கு செலவு செய்ய அவசியமில்லை என்றும் டெட் போ கூறினார். பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் போர்வீரர்களுக்கான பொருட்களை எடுத்துச் செல்வதற்காக பாகிஸ்தான் 100 மில்லியன் டாலரை அமெரிக்காவிடம் பெற்றுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment