Saturday, July 21, 2012

வேர் இஸ் தி பார்ட்டி டுனைட்?


விஜய் - அஜீத் இருவரும் எதிரும் புதிருமாக இருந்து வந்த போது, 'மங்காத்தா' படப்பிடிப்பில் அஜீத்தை நேரில் சந்தித்தார் விஜய்.  இருவரும் நண்பர்களாக வலம் வந்தனர்.

அதற்கு பிறகு கூட, நேரம் கிடைக்கும் போது எல்லாம் இருவரும் சந்தித்து நட்பு பாராட்டி வருகிறார்கள்.

இவர்களைப் போலவே சிம்பு - தனுஷ் இருவரும் எதிரும் புதிருமாக இருந்து வந்தனர். 'வாலு' பட TEASER-ல் கூட தனுஷ் நடித்த 'படிக்காதவன்' பட வசனத்தினை கிண்டல் செய்வது போல இருந்தது.

ஆனால் சிம்பு, "அது இயக்குனர் பொறுப்பு.. நான் அதில் தலையிடுவது இல்லை" என்று தெரிவித்தனர்.

சமீபத்தில் SIIMA விருதுகள் வழங்கும் விழா இருவரையும் இணை பிரியாத நண்பர்களாக மாற்றி இருக்கிறது. SIIMA விருதுகள் வழங்கும் விழாவில் இருவரும் ஒன்றாக மேடையில் ஆடிப் பாடினார்கள். அதனைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக விமானத்தில் சென்னை வந்தனர்.

இப்போது இருவரும் அடிக்கடி சந்தித்து தங்களது நட்பை வளர்த்து வருகிறார்களாம். தற்போது ஹைதராபாத்தில் 'வாலு' படப்பிடிப்பில் இருக்கிறார் சிம்பு. தனது நண்பன் சிம்புவை பார்க்க அங்கு சென்று இருக்கிறார் தனுஷ்.

சிம்பு, தனுஷ் ஒன்று சேர, அங்கு படப்பிடிப்பில் இருந்த சிம்புவின் நண்பரான ஜெய்யும் அவர்களுடன் இணைந்து இருக்கிறார். இவர்கள் மூவருக்கும் PUBல் பார்ட்டி கொடுத்து இருக்கிறார் தெலுங்கு நாயகர் மனோஜ் .

இவ்வாறு எதிரும் புதிருமாக இருந்தவர்கள் கூட நட்பு பாராட்ட ஆரம்பித்து விட்டார்கள். அவர்களது ரசிகர்களும் விரைவில்..


No comments:

Post a Comment