லக்னோவில் உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியின் சிலையை உத்தர பிரதேச நவநிர்மன் சேனாவினர் சேதப்படுத்தியுள்ளனர். கம்பீரமான சிலை தற்போது தலையின்றி முண்டமாக உள்ளது.
உத்தர பிரதேச நவநிர்மன் சேனா அம்மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின் சிலையை சேதப்படுத்தப்போவதாக கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி அறிவித்திருந்தது. இந்நிலையில் லக்னோவில் உள்ள அம்பேத்கார் பூங்கா அருகே உள்ள மாயாவதியின் சிலை அருகே நவநிர்மன் சேனாவைச் சேர்ந்த 4 பேர் இன்று பிற்பகல் 1.10 மணிக்கு புகைப்படம் எடுத்தனர்.
அப்போது அங்கிருந்த காவலாளி அவர்களை சிலைக்கு அருகே செல்லவிடமால் தடுத்துள்ளார். அதற்கு அவர்கள் நாங்கள் புகைப்படம் தானே எடுக்கிறோம். சிலை அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறோமே என்று கூறியுள்ளனர். பிறகு சிலைக்கு அருகே சென்றதும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கோடாரியை எடுத்து சிலையின் தலையை துண்டித்தனர்.
கைப்பையுடன் இருந்த கையையும், இன்னொரு கையையும் துண்டித்தனர். முன்பு கம்பீராக நின்ற சிலை தற்போது தலையின்றி, கைகள் இன்றி அலங்கோலமாக உள்ளது. அந்த 4 பேரும் அங்கிருந்து செல்லும் முன்பு ஒரு துண்டு பிரசுரத்தையும் போட்டுச் சென்றுள்னர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியினர் வன்முறையில் ஈடுபடுவதைத் தடுக்க உத்தர பிரதேச போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment