தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ் ‘ஊகொடதாரா உலிக்கிபடதாரா‘ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் நாளை ரிலீசாக உள்ளது.
இதையொட்டி ஐதராபாத்தில் மோகன்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
சினிமா வியாபாரம் மற்ற வியாபாரங்களைவிட கஷ்டமானது. இதில் போட்ட பணம் திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல்தான் வியாபாரம் செய்யவேண்டும்.
திருட்டு சி.டி. காரணமாக தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய நிலைமை உள்ளது. மக்கள் தயவுசெய்து திருட்டு சி.டி.க்கள் வாங்குவதில்லை என்று உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும்.
திருட்டு சி.டி.க்கள் தயாரிப்பாளரை மட்டுமின்றி சினிமாவையே அழித்துவிடும். திருட்டு சி.டி. தயாரிப்பவர்கள் குறித்து யாராவது தகவல் கொடுத்தால் எனது கல்வி நிறுவனத்தில் தகவல் தந்தவரின் மகன் அல்லது மகளை எல்.கே.ஜி. முதல் என்ஜினீயரிங் வரை இலவசமாக படிக்க வைப்பேன். படிக்கும் வயதில் குழந்தை இல்லாதவர்கள் தகவல் தந்தால் ரூ.50 ஆயிரம் பரிசு கொடுப்பேன்.
நான் சினிமாவில் நடிக்க துவங்கி 37 ஆண்டுகள் ஆகிறது. 555 படங்களில் நடித்து விட்டேன். வில்லன் நடிகராகி கதாநாயகனானேன். இன்னும் என் பார்வையில் வில்லன்தான் சிறந்தவன். வில்லன் வேடத்தில் தான் முழு திறமையையும் வெளிப்படுத்த முடியும்.
இவ்வாறு மோகன்பாபு கூறினார்.
No comments:
Post a Comment