ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவியவர், சங்மா. தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சங்மா, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக கட்சியில் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விலகி விட்டார்.
இதற்கிடையில், மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை மந்திரியாக பதவி வகித்து வரும் அகதா சங்மா, ஜனாதிபதி தேர்தலில் தனது தந்தைக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக, ஒடிசா மற்றும் சத்தீஷ்கார் மாநில தேசியவாத காங்கிரஸ் தலைமையிடம் இருந்து மேலிடத்திற்கு புகார் வந்துள்ளது.
இந்த நிலையில், அகதா சங்மா தேசியவாத காங்கிரஸ் தலைவர் சந்தித்து, தனது மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்ததாக, கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த பிரச்சினை விவாதத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், தேசியவாத காங்கிரசின் முடிவுப்படி அகதாவின் ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்திருப்பதாக, மற்றொரு தலைவர் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் நடந்துகொள்ளும் விதம் காரணமாக சரத்பவார் மற்றும் பிரபுல் பட்டேல் இருவரும் மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த அடிப்படையில், அகதா சங்மாவும் மந்திரி பதவியில் இருந்து விலகுவது பற்றி சரத்பவாரை சந்தித்து தெரிவித்ததாக, அந்த தலைவர் கூறினார்.
No comments:
Post a Comment