டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் புறக்கணித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பிரபுல் படேலும் கூட்டத்தை புறக்கணித்தார்.
பிரதமருக்கு அடுத்த இடத்தில் மூத்த தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், அந்த இடத்திற்கு தன்னை நியமிக்க வேண்டும் என்று சரத்பவார் வலியுறுத்தி வந்தார். ஆனால் அவரது கோரிக்கை நிறைவேறவில்லை.
கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது பிரதமருக்கு அடுத்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. பவாருக்கு 3-வது இருக்கை அளிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த தேசியவாத காங்கிரஸ் இன்றைய கூட்டத்தை புறக்கணித்துள்ளது.
இதேபோல் சனிக்கிழமை நடந்த துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வின்போதும் தேசியவாத காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment