பஸ்சில் இருந்து விழுந்து பள்ளிச் சிறுமி சுருதி பலியானது பற்றிய செய்தி பத்திரிகைகளில் வெளியானது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இன்று தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, அரசு அட்வகேட் ஜெனரலை உடனே கோர்ட்டுக்கு வரும்படி உத்தரவிட்டார். அதன்படி சிறிது நேரத்தில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கோர்ட்டில் ஆஜர் ஆனார். சிறுமி உயிர் இழந்தது குறித்து பத்திரிகையில் வந்ததை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், பள்ளி சிறுமி கீழே விழுந்து இறந்த பஸ்சுக்கு 20 நாட்களுக்கு முன்பு தான் “எப்.சி.” தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சிறுமி உயிர் இழக்க காரணமான பஸ், ஓட்டுவதற்கு தகுதியானது என்று சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இது எப்படி என்பதற்கு கோர்ட்டுக்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தர விட்டனர். அனுமதி வழங்க காரணமான அதிகாரிகளுக்கு கண்டனமும் தெரிவித்தனர்.
விபத்துக்கு காரணமான பஸ் ஓட்டத் தகுதியானது என்று “எப்.சி.” தகுதி சான்றிதழ் வழங்கிய அதிகாரி நாளை சென்னை ஐகோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நடந்த சம்பவம் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள் அட்வகேட் ஜெனரலிடம் சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். பின்னர் விசாரணையை நாளைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:
Post a Comment