தாம்பரம் அருகே பள்ளி வாகனத்தின் ஓட்டை வழியே கீழே விழுந்து, பஸ் சக்கரத்தில் சிக்கி பலியான மாணவி சுருதியின் தந்தை சேதுமாதவன் சொந்தமாக ஆட்டோ, கார் ஓட்டி வருகிறார்.
தினமும் காலையிலும், மாலையிலும் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகளை ஏற்றி செல்வார். வழக்கம் போல் நேற்று மாலையிலும் பள்ளிகளில் இருந்து மாணவ- மாணவிகளை ஏற்றி வந்தார்.
அப்போது சேது மாதவனுக்கு ஒரு போன் வந்தது. அதில் சுருதி விபத்தில் சிக்கி இருக்கிறாள். உடனே வாருங்கள் என்று அழைத்தனர். மகனை நினைத்து பதறிய சேது மாதவன் அந்த இக்கட்டான நேரத்திலும் ஆட்டோவில் இருந்த குழந்தைகளை பத்திரமாக அனைவரது வீடுகளிலும் கொண்டு இறக்கினார்.
அதன் பிறகு கண்ணீர் மல்க முடிச்சூருக்கு விரைந்தார். ஆனால் அங்கு அவரால் மகளின் உயிரற்ற உடலைத்தான் பார்க்க முடிந்தது. மகளின் உடல் அருகே கண்ணீர் மல்க அமர்ந்திருந்த சேதுமாதவன் கூறியதாவது:-
வழக்கமாக பள்ளி பஸ் எங்கள் வீடு பகுதி வழியாக சென்று முடிச்சூரில் யூடேர்ன் போட்டு திரும்பி வரும். பஸ் யூடேர்ன் போடும்போதே குழந்தைகள் புத்தக பைகளை எடுத்தபடி இறங்குவதற்கு தயாராகி விடுவார்கள்.
நேற்று அப்படி எனது மகள் இறங்குவதற்காக சீட்டை விட்டு எழுந்தபோதுதான் பஸ்சின் ஓட்டை வழியாக கீழே விழுந்திருக்கிறாள். பஸ்சை சரியாக பராமரிக்காததால் எனது மகளை அநியாயமாக பலி வாங்கிவிட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment