காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவிலை தொல்லியல் துறை கையகப்படுத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனை கண்டித்து அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சிகள், சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பொதுமக்களுடைய போராட்டத்திற்கு பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜனதா கட்சியின் தலைவருமான சுஷ்மாசுவராஜ் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக மாமல்லபுரம் நகர பா.ஜனதா கட்சி தலைவர் எம்.ஸ்ரீதருக்கு அவர் ஈ-மெயில் மூலமாக கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில், மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலை தொல்லியல் துறை வசம் எடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, மாமல்லபுரம் மக்களுக்கு ஆதரவாகவும், மத்திய தொல்லியல் துறைக்கு எதிராகவும் பாராளுமன்றத்தில் பா.ஜனதா எம்.பி.க்கள் குரல் கொடுப்பார்கள் என்று சுஷ்மா சுவராஜ் கூறி உள்ளார்.

No comments:
Post a Comment