கேரள அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. 2011-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்களை தேர்வு செய்வதற்காக விருது கமிட்டி தலைவராக பாக்யராஜ் நியமிக்கப்பட்டார்.
விருது பெறும் கலைஞர்களின் விவரங்களை கேரள மந்திரி கணேஷ்குமார் திருவனந்தபுரத்தில் நேற்று அறிவித்தார். சிறந்த நடிகராக நடிகர் திலீப் தேர்வு செய்யப்பட்டார். வெள்ளரிப்பிரா வின்டே சங்காதி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
சால்ட் அன்ட் பெப்பர் படத்தில் நடித்த ஸ்வேதாமேனன் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார். சிறந்த படமாக இந்தியன் ருப்பி தேர்வு செய்யப்பட்டது. சிறந்த இயக்குனருக்கான விருதை பிளஸ்சியும் (பிரணயம்), சிறந்த இசை அமைப்பாளராக சரத் (இவன் மேகரூபன்), பாடகராக சுதீப்குமார் (ரதிநிர்வேதம்), பாடகியாக ஸ்ரேயா கோஸல், பாடல் ஆசிரியராக ஸ்ரீகுமாரன்தம்பி, நகைச்சுவை நடிகராக ஜெகதி ஸ்ரீகுமார், புதுமுக இயக்குனராக ஷெர்ரி (ஆதிமத்யாந்தம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான விருது அடுத்த மாதம் திருவனந்தபுரத்தில் நடக்கும் விழாவில் வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment