சகுனி, பில்லா-2 என சமீபத்தில் ரிலீஸான 2012-ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட படங்களை பின்தள்ளி ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டர்களை மொய்க்க காரணமாக இருந்த படம் ’நான் ஈ’. பெரிய பெரிய படங்களில் ஈயாடிக்கொண்டிருக்க, ஈயை வைத்து படமெடுத்தவர் ஹிட்டான படம் கொடுத்தது மிகப்பெரிய விஷயம்.
தெலுங்கில் பெரிய ஹீரோக்களை வைத்து கமெர்ஷியல் படங்களை எடுத்து வெற்றிகளைப் பெற்றுக்கொண்டிருந்த இயக்குனர் ராஜமௌலி வித்தியாசமான முயற்சியாக நான் ஈ படத்தை மேற்கொண்டார்.
ராஜமௌலியின் மாறுபட்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தமிழில் தனது அடுத்த படத்திற்கான வேலைகளையும் உடனடியாக துவங்கிவிட்டார். ராஜமௌலி 2005-ஆம் ஆண்டு இயக்கிய சத்ரபதி என்ற படத்தை தமிழில் டப்பிங் செய்து ’சந்திரமௌலி’ என்ற பெயரில் வெளியிடுகிறாராம்.
பிரபாஸ், ஸ்ரேயா நடித்த இந்த படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனராம். இந்தப்படம் தெலுங்கில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment