சென்னையில் ஒரு வீட்டில் இருந்து திருடிய 70 பவுன் நகையும், மன்னிப்பு கடிதத்தையும் ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி, அதே வீட்டு வாசற்படியில் வைத்து சென்றுள்ளார் ஒரு நல்ல திருடன்.
சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வருபவர் அசார் ஹூசைன். ஓய்வு பெற்ற டாக்டர். இவரது வீட்டில் இருந்த 70 சவுரன் தங்க நகை, கடந்த 20ம் தேதி திருட்டு போனது. இது குறித்து ஹூசைன், போலீசாரிடம் புகார் அளித்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 7.45 மணி அளவில் ஹூசைனின் வீட்டு காலிங் பெல் அடித்தது. இதையடுத்து வீட்டு கதவை திறந்தார் ஹூசைனின் மனைவி சானா. ஆனால் வீட்டு வாசலில் யாரும் இருக்கவில்லை.
இந்த நிலையில் வாசற்படியில் பிளாஸ்டிக் கவர் ஒன்று கிடந்தது. அதை எடுத்து பார்த்த சானாவிற்கு ஒரே அதிர்ச்சி. அதில் கடந்த 20ம் தேதி வீட்டில் இருந்து காணாமல் போன 70 பவுன் நகைகள் இருந்தது. மேலும் அந்த கவரின் உள்ளே ஒரு கடிதமும் ஒன்று இருந்தது.
இதில், நான் மிக பெரிய தவறை செய்துவிட்டேன். சானா அம்மாவுக்கு நான் இப்படி செய்திருக்க கூடாது. என்னை மன்னித்துவிடுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.
இதை உடனடியாக போலீசாருக்கு அறிவித்த சானா, தனது திருட்டு போன நகைகள் கிடைத்துவிட்டதாக கூறினார். சானா கூறிய சம்பவத்தை கேட்டு போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சிவசங்கரன் கூறியதாவது,
திருட்டு போன நகைகள் திரும்ப கிடைத்தது குறித்து ஹூசைன் தகவல் தெரிவித்தார். அதில் அதிர்ச்சி அடைந்த நான், நகை மற்றும் கடிதத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு வருமாறு கூறினேன். நகைகளை பரிசோதித்த போது, அது காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட அதே நகைகள் தான் என்பது தெரியவந்தது என்றார்.
No comments:
Post a Comment