திருவான்மியூர் அடுத்த பெரிய நீலாங்கரை குப்பத்தை சேர்ந்தவர் கதிரவன் (28). இவர் அதே பகுதியில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வருகிறார். சொந்த ஊர் கும்பகோணம்.
இவரது மனைவி அன்புக்கரசி (23). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒரு வயதில் பெண் குழுந்தை ஒன்று உள்ளது. அன்புக்கரசிக்கு சில நாட்களுக்கு முன்பு வாயின் உள்பகுதியில் கட்டி வந்துள்ளது. இதனால் அவரால் எதையும் சாப்பிட முடியவில்லை.
நேற்று மதியம் சாப்பிட்டபோது வலி மிகவும் அதிகமாக இருந்தது. இதுபற்றி அவர் கதிரவனிடம் கூறினார். இதையடுத்து அவர் அன்புக்கரசியை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அன்னை கிளீனிக்குக்கு அழைத்து சென்றார்.
அங்கு அவரை டாக்டர் பாலாஜி பரிசோதித்தார். பின்னர் அவர், வாயில் உள்ள கட்டியை அகற்றினால் வலி இருக்காது. எனவே கட்டியை அகற்றுவதற்கு வசதியாக கட்டி இருக்கும் பகுதியை மறத்துப்போகச் செய்ய ஊசி போடவேண்டும்.
அதன்பிறகு எந்த வலியும் இல்லாமல் கட்டியை அகற்றி விடலாம் என்றார். இதற்கு கதிரவன் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து டாக்டர் பாலாஜி அன்புக்கரசிக்கு மறத்துப் போகச்செய்யும் ஊசியை போட்டார். பின்னர் இன்னும் சில நிமிடங்கள் கழித்து கட்டியை அகற்றுகிறேன் என்று கூறினார்.
இந்த ஊசி போட்ட சிறிது நேரத்தில் அன்புக்கரசி திடீரென மயங்கி விழுந்தார். இதில் பயந்துபோன டாக்டர் பாலாஜி அவரை பரிசோதித்தார். அப்போது அன்புக்கரசி இறந்து போனது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் பாலாஜி, கதிரவனிடம் சென்று உங்கள் மனைவி மயக்க நிலையில் உள்ளார். அவரை பிடித்துக் கொள்ளுங்கள் நான் பக்கத்தில் சென்று மருந்து வாங்கி வருகிறேன் என்று கூறி விட்டு கிளீனிக்கை விட்டு தப்பி ஓடி விட்டார்.
நீண்ட நேரம் ஆகியும் டாக்டர் வராததால் கதிரவன், மனைவி அன்புக்கரசியை ஒரு ஆட்டோவில் ஏற்றி அதே பகுதியில் உள்ள இன்னொரு கிளினிக்குக்கு சென்றார். அங்கு அன்புக்கரசியைப் பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினார்.
இதை கேட்டதும் கதிரவன் கதறி அழுதார். தவறான ஊசியால் அன்புக்கரசி இறந்துபோன தகவல் அறிந்த பெரிய நீலாங்கரை குப்பத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அன்னை கிளீனிக்கை முற்றுகையிட்டனர்.
இதையறிந்ததும் நீலாங்கரை இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கிளீனிக்கை முற்றுகையிட்ட பொதுமக்களுடன் சமரச பேச்சு நடத்தினர்.
அப்போது போலீசார் தவறான ஊசி போட்டு பெண்ணை கொன்ற டாக்டர் பாலாஜி மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை எற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து அன்புக்கரசியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய டாக்டர் பாலாஜியை தேடி வருகிறார்கள். பெரிய நீலாங்கரை குப்பத்தில் பதட்டம் நிலவுவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment